Tamil Cinema News
எதிர் நீச்சல் ஜனனியை பின்னால் பிடித்த நடிகர்.. ஆடச்சொன்னா இதெல்லாம் பண்ணுவீங்களா
எதிர்நீச்சல் தொடர் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமானவர் நடிகை மதுமிதா. இவர் ஆரம்பத்தில் கன்னடத்தில் சீரியல்களில் முயற்சி செய்து வந்தார்.
ஆனால் தென்னிந்தியாவில் அதிக வரவேற்பு பெற்ற சின்னத்திரை துறையாக தமிழ்நாடு இருப்பதால் தொடர்ந்து தமிழகத்தில் வந்து முயற்சி செய்தார். அதனை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் மதுமிதா.
சன் டிவி கதாபாத்திரம்:
ஜனனி என்கிற கதாபாத்திரம்தான் இந்த மொத்த நாடகத்தின் முக்கிய கதாபாத்திரம் ஆகும். பெண்களை அடிமையாக வைத்திருக்கும் ஒரு குடும்பத்திற்கு திருமணம் ஆகி செல்லும் ஜனனி அங்கு மேற்கொள்ளும் போராட்டங்களே எதிர்நீச்சல் சீரியலின் கதையாக இருந்தது.

சமீபத்தில்தான் எதிர்நீச்சல் சீரியல் முடிவை கண்டது. மேலும் இந்த சீரியலின் அடுத்த பாகம் கண்டிப்பாக வரும் என்றும் பேச்சுக்கள் எல்லாம் இருந்து வருகின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
மாடர்ன் ரதி:
மதுமிதாவை பொருத்தவரை நாடகத்தில் புடவை கட்டிக்கொண்டு நடித்தாலும் கூட சமூக வலைதளங்களில் கண்களை கவரும் வகையில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவராக இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அப்படியே அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று அதிக வைரலாகி வருகிறது.

அதில் நண்பர் ஒருவருடன் நடனமாடும் மதுமிதா புஷ்பா திரைப்படத்தில் வரும் பாடலுக்கு ஆடியிருக்கிறார். அப்படி ஆடும்பொழுது அந்த கூட ஆடும் நபர் அவரது இடுப்பை பிடித்து ஆடி இருப்பதுதான் மதுமிதாவின் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஆட வேண்டும் என்றால் அல்லது பெண்ணை தொடாமல் ஆட வேண்டியதுதானே என்று ஒரு பக்கம் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு நடுவே அவர்கள் இருவரும் காதலர்களாக இருப்பார்களோ என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்த வருகின்றன.
