News
அவரை நம்பி ஏமாந்துட்டேன்!.. இரண்டாம் மனைவியை பிரியும் மதுரை முத்து..!
மதுரை முத்து சின்ன தொலைக்காட்சிகளில் பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதன் பிறகு மக்கள் மத்தியில் அவருக்கு அதிக வரவேற்புகள் உருவானது.
தொடர்ந்து சன் டிவியில் ஒளிப்பரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார் மதுரை முத்து. அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பல வருடங்களாக பங்கு பெற்று வந்தார்.
மதுரை முத்து வளர்ச்சி:
இதனால் நிறைய கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களில் எல்லாம் முக்கிய விருந்தாளியாக மதுரை முத்து இருந்தார்.

இதில் அதிகமாக பணம் சம்பாதித்த மதுரை முத்து வீடு கார் என்று செட்டில் ஆகிவிட்டார். இப்போது தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் இவர் பங்காற்றி வருகிறார். இன்னமும் விஜய் டிவியில் ட்ரெண்டிங்கான ஒரு ஆளாக இவர் இருந்து வருகிறார்.
மதுரை முத்துவின் முதல் மனைவியான லேகா 2016 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் சென்ற காரின் டயர் வெடித்ததால் இந்த விபத்து நடந்துள்ளது. அதனை தொடர்ந்து லேகாவின் தோழியான பல் மருத்துவர் நீத்துவை திருமணம் செய்துக்கொண்டார் மதுரை முத்து.
மனைவியுடன் கருத்து வேறுபாடு:
தன்னுடைய மகள்களுக்காக இந்த திருமணத்தை செய்துக்கொள்வதாக மதுரை முத்து கூறியிருந்தார். இந்த நிலையில் சமீப காலங்களாக மதுரை முத்துவின் மனைவி ஒரே சோக ஸ்டேட்டஸ்களாக போட்டு வருகிறார்.

அதில் எனக்குன்ன்னு ஒரு உயிர் வேண்டும். அது என்னை மட்டும் நேசிக்க வேண்டும் என அழுதப்படி பதிவிட்டிருந்தார். இப்படி சோக வீடியோ போடுவதை பார்க்கும்போது இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக தெரிகிறது.
எனவே விரைவில் இருவரும் பிரிந்துவிட வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
