தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தந்தை காலமானார்? – அதிர்ச்சியில் திரைத்துறை!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட மிக முக்கிய நடிகரான கிருஷ்ணா கட்டமைனேனி இன்று காலமானார்.

தெலுங்கு சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் கிருஷ்ணா. தெலுங்கில் இதுவரை இவர் 268 திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கின் முண்ணனி நடிகரான மகேஷ் பாபு இவரின் மகன் ஆவார்.

இவருக்கு பிறகு மகேஷ் பாபு திரைத்துறைக்கு வந்ததால் அந்த சூப்பர் ஸ்டார் பட்டம் அப்படியே மகேஷ் பாபுவிற்கு வழங்கப்பட்டது. 79 வயது ஆன நிலையில் இன்று அதிகாலை அளவில் நடிகர் கிருஷ்ணாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவரை அவசரமாக ஹைதராபாத்தில் உள்ள காண்டினெண்டல் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி 15.11.2022 காலை 4.30 மணி அளவில் நடிகர் கிருஷ்ணா காலமானார். கிருஷ்ணாவின் முதல் மனைவியான இந்திரா தேவி கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதிதான் காலமானார். அடுத்த சில வாரங்களிலேயே கிருஷ்ணாவும் காலமாகி இருப்பது அவரது குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தெலுங்கானாவின் முதலமைச்சரான கே.சந்திரசேகர் ராவ் மற்றும் பல பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh