Tamil Cinema News
அந்த ஒரு செயலால் எல்லா பணமும் போச்சு.. கவலையில் இருக்கும் மைனா நந்தினி..!
விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்த பிரபலங்களில் முக்கியமானவர் நடிகை மைனா நந்தினி. தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
அதேபோல விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார் என்னதான் தமிழ் சினிமாவில் படங்களில் நடித்திருந்தாலும் எல்லாம் துணை கதாபாத்திரங்கள் என்பதால் பெரிதாக மக்கள் மத்தியில் அவர் தெரியவில்லை.
ஆனால் விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் முக்கிய போட்டியாளராக இவர் பங்கேற்ற காரணத்தினால் அதன் மூலமாக மக்கள் மத்தியில் அதிகமாக தெரிய துவங்கினார். இந்த நிலையில் மைனா நந்தினி ஒரு youtube சேனல் நடத்தி வருகிறார்.
யூ ட்யூப் சேனலில் தொடர்:
அதன் மூலமாக வருமானமும் ஈட்டி வருகிறார். வெப் சீரிஸ் போலவே தொடர்ந்து தனது youtube சேனலில் தொடர் ஒன்றை வெளியிட்டு வந்து கொண்டிருந்தார். மைனா நந்தினி ஆனால் திடீரென்று அந்த தொடர் இனி வெளியாகாது என்று அறிவித்திருந்தார்.
இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது இலங்கைக்கு இந்த தொடருக்காக படப்பிடிப்பு நடத்த சென்றிருக்கிறார் மைனா நந்தினி. அங்கு நிறைய காட்சிகளை படம் பிடித்து விட்டு அதை ஒரு ஹார்ட் டிஸ்க்கில் பதிவேற்றி எடுத்து வந்தனர்.
800 ஜி.பி கொண்ட அந்த டேட்டாக்கள் அனைத்தும் அந்த ஹார்ட் டிஸ்க் கீழே விழுந்ததால் செயல் இழந்து எடுக்காமல் போய்விட்டது. எனவே இதனால் அதிக பண நஷ்டம் ஏற்பட்டதாக கூறி இருக்கிறார் மைனா நந்தினி. எனவே இந்த தொடரை தொடர்ந்து நடத்த முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
