Tamil Cinema News
பாலச்சந்தர் சார் ஸ்கூல்ல படிச்சவங்களுக்கு மட்டும்தான் அந்த திறமை உண்டு.. யாருக்கும் தெரியாத விஷயமா இருக்கே..!
எல்லா சமயங்களிலுமே சிறந்த நடிகர்களுக்கு முக்கியத்துவம் என்பது தமிழ் சினிமாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் ஓரளவு நடிப்புக்கு முக்கியத்துவம் இருந்தது. அதன் முக்கியத்துவத்தை அதிகரித்தவர் நடிகர் சிவாஜி கணேசன்.
சிவாஜி கணேசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிறகு நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுக்குதான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலை உருவானது.
அதற்கு முன்பு வரை நாடகத் துறையில் இருந்து வந்தவர்கள் சினிமாவிற்கு வந்தனர். பிறகு நாடகத்திலே இல்லாத அடுத்த தலைமுறையினர் சினிமாவிற்கு வர துவங்கினர். அப்பொழுது அவர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்பட்டது.
நடிப்பின் முக்கியத்துவம்:
எனவே பாலச்சந்தர் மாதிரியான நிறைய இயக்குனர்கள் பயிற்சி பள்ளிகளை தொடங்கினர் பாலச்சந்தர் பயிற்சி பள்ளி அதில் சிறப்பானது அதில் படித்த நிறைய பேர் இப்பொழுது தமிழ் சினிமாவில் பிரபலமானவர்களாக இருக்கின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தும் அதில் ஒருவர்தான். இந்த நிலையில் இது குறித்து நடிகை மாளவிகா அவினாஷ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் அதில் அவர் கூறும் போது எப்பொழுதுமே பாலச்சந்தர் பயிற்சி பள்ளியில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட ஸ்டைல் ஒன்று இருக்கும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைலை அவர் உருவாக்கினார் சுஹாசினியாக இருக்கட்டும் நடிகை சரிதா போன்ற பலருக்குமே இந்த மாதிரி ஒரு தனித்துவத்தை உருவாக்கியவர் பாலச்சந்தர் என்று கூறி இருக்கிறார் மாளவிகா அவினாஷ்.