Social Media Bar

இந்தியாவில் எல்லோருக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் கூட அதற்கு எந்த அளவு அவர்கள் மனரீதியாக தயாராகி இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியான விஷயமாக தான் இருக்கிறது.

ஏனெனில் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்றால் பிறக்கும் குழந்தை எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற மனநிலை அனைத்து பெற்றோர்களுக்கும் கிடையாது.

தன்னுடைய குழந்தையாகவே இருந்தாலும் மாற்றுத்திறனாளியாகவோ அல்லது இவர்கள் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்றாலோ அதை நிராகரிக்க சிலர் தயாராக இருக்கின்றனர்.

Read More:  வாய்ப்பில்லை சூரி.. இனிமே அது நடக்காது.. ஓப்பன் டாக் கொடுத்த வெற்றிமாறன்..

நடிகையின் மகன்:

malavika avinash
malavika avinash

இந்த நிலையில் இது குறித்து நடிகை மாளவிகா அவினாஷ் பேசியிருக்கிறார் அவர் கூறும் பொழுது எனக்கு குழந்தை பிறந்த பிறகு அதை வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பது குறித்த பேச்சுக்கள் அதிகமாக இருந்தது.

ஆனால் எனக்கும் எனது கணவருக்கும் அவன் எங்களது குழந்தை அவனை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் தான் இருந்தது. பெரும்பாலும் அம்மாக்களுக்கு தனது மகன்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் ஒரு மகன் தனது தாயை அம்மா என்று அழைப்பதுதான் அந்த தாய்க்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும்.

Read More:  காலம் காலமா எடுத்த அதே கதை.. உளவாளியாக விஜய் தேவரகொண்டா.. கிங்டம் ட்ரைலர் வெளியானது..!

ஆனால் எனது மகன் இப்பொழுது வரை என்னை அம்மா என்று அழைத்தது கிடையாது அவனுக்கு 16 வயது ஆகிறது கடந்த 15 வருடங்களாக நாங்கள் இரவுகளில் தூங்கியது கிடையாது ஒவ்வொரு நாளும் நாளை இவன் உயிரோடு இருப்பானா என்பது தான் எங்களது கேள்வி ஆக இருக்கும் என்று கூறியிருக்கிறார் மாளவிகா அவினாஷ்.