Connect with us

உங்கள் கவனத்தை ஈர்க்க கவர்ச்சி போதும்.. நடிக்க தேவையில்லை.. ரசிகர்களை ஏளனப்படுத்திய மாளவிகா மோகனன்!.

Malavika mohanan

News

உங்கள் கவனத்தை ஈர்க்க கவர்ச்சி போதும்.. நடிக்க தேவையில்லை.. ரசிகர்களை ஏளனப்படுத்திய மாளவிகா மோகனன்!.

Social Media Bar

சினிமாவில் ஒரு நடிகை சாதிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில் அவர் அறிமுகமாகும் படத்தின் வெற்றி அதன் பிறகு அவருக்கு ரசிகர்களின் மத்தியில் இருக்கும் வரவேற்பு ஆகியவற்றை பொறுத்து தான் ஒரு நடிகைக்கு பட வாய்ப்புகள் குவியும்.

பிறமொழி படங்களில் ரசிகர்களை கவர்ந்த நடிகைகள் தமிழில் அறிமுகமாகும் போது முதல் படத்திலிருந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் மாளவிகா மோகன்.

இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் அவ்வப்போது ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் வருபவர். இந்நிலையில் சமீப காலங்களாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்த்திருக்கிறார். அந்த வகையில் ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு, மாளவிகா சமூக வலைதளத்தில் அளித்த பதில் தற்போது வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை மாளவிகா மோகன்

மாளவிகா மோகன் கேரளாவை பூர்வீகமாக கொண்டு கண்ணூர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் ஆவார். பட்டம் போல என்ற மலையாள தெரியும் படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தியில் பியாண்ட் த கிளவுட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக பாலிவுட்டில் பலரின் கவனத்தை ஈர்த்தார்.

malavika mohanan pics

அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படமான பேட்ட திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். தமிழில் ஆரம்பமாகும் போதே முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் மாளவிகா மோகன்.

தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பழமொழி படங்களில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் மாளவிகா மோகன், தற்போது தமிழில் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடலில் கூறிய கருத்து தற்பொழுது சர்ச்சை ஏற்படுத்திருக்கிறது.

உங்கள் கவனத்தை ஈர்க்க நடிக்க தேவையில்லை

படத்தின் பிரமோஷன், விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் என அனைத்திலும் மாளவிகா மோகன் கிளாமராக உடை அணிந்து வருவது வழக்கமான ஒன்றுதான்.

மேலும் அவர் பதிவிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் சற்று கவர்ச்சியாக இருக்கும். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ரசிகர்களுடன் கலந்து உரையாடி வருவதை மாளவிகா மோகன் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் மாளவிகா மோகனன் ரசிகர் ஒருவருடன் கலந்துரையாடும் போது அவர் ட்விட்டரில் கவர்ச்சி காட்டாமல், தேவையில்லாத ப்ரமோஷன்களில் ஈடுபடாமல், நீங்கள் எப்போது நடித்து பார்வையாளர்களை கவர போகிறீர்கள் என அவர் கேட்டிருக்கிறார்.

இதற்கு மாளவிகா மோகன் உங்களின் கவனத்தை ஈர்க்க “நான் நடிப்பை கற்றுக்கொள்ள தேவை இல்லை” என பதில் அளித்திருக்கிறார். தற்போது இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

malavika
To Top