பேய் கதை என்பதையும் தாண்டி அதிகார வர்க்கத்துக்கு ஒரு சவுக்கடி பிரம்மயுகம்!.. உள்ள அப்படி ஒரு விஷயம் இருக்கு!..

Bramayugam malayala movie : மலையாளத்தில் சிறந்த நடிகரான மம்முட்டியின் நடிப்பில் தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் பிரம்மயுகம். பிரம்மயுகம் என்னும் படத்தின் பெயரிலேயே ஒரு கதை கூறப்பட்டிருக்கிறது.

கலியுகம் துவங்குவதற்கு முந்தைய காலம்தான் பிரம்மயுகம். கலியுகம் என்பது குற்றங்கள் அதிகம் நடப்பதற்கான காலம் எனக் கூறப்படுகிறது எனவே அதற்கு முன்பு உள்ள பிரம்மயுகத்தில் கடவுள்களின் சக்திகளுக்கு எந்தவித பலனும் இல்லாமல் போய்விட தீய சக்திகளின் ஆட்சி அதிகமாக இருக்கிறது.

அந்த சமயத்தில் தீய சக்திகள் வாழும் ஒரு வீட்டுக்குள் மாட்டிக்கொண்ட இருவரின் கதையாக பிரம்மயுகம் திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் பேய் கதைகளம் என்பதையும் தாண்டி அதிகார வர்க்கத்தை குறித்து மிக துல்லியமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Social Media Bar

ஒருவரிடம் மித மிஞ்சிய அதிகாரம் இருக்கும் பொழுது அவர் வைப்பது தான் சட்டம் என்னும் நிலையில் அவர் எப்படி ஆன விஷயங்களை செய்வார் மேலும் அவருக்கு கீழ் இருப்பவர்கள் அந்த அதிகாரத்தை பெறுவதற்கு எந்த ஒரு விஷயத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள் அல்லவா.

இந்த அதிகாரமாகத்தான் அந்த திரைப்படத்தில் ஒரு மோதிரம் காட்டப்பட்டுள்ளது. அந்த மோதிரத்தை பெறுபவர்களுக்கு எந்த விஷயத்தையும் செய்யக்கூடிய திறன் கிடைக்கும். பேய் படம் என்பதையும் தாண்டி இந்த விஷயங்கள் எல்லாம் இந்த திரைப்படத்தில் முக்கியமான விஷயமாக இருப்பதாக படம் பார்த்த பலர் பேசுகின்றனர்.