Connect with us

அதுக்கெல்லாம் தனி தைரியம் வேணும் தம்பி… பிக்பாஸில் வாய் விட்ட வி.ஜே விஷால்.. பதிலடி கொடுத்த மணிமேகலை..!

manimegalai vj vishal

Tamil Cinema News

அதுக்கெல்லாம் தனி தைரியம் வேணும் தம்பி… பிக்பாஸில் வாய் விட்ட வி.ஜே விஷால்.. பதிலடி கொடுத்த மணிமேகலை..!

Social Media Bar

சமீபத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலைக்கும் அதே விஜய் டிவியில் பணி புரிந்து வரும் வி.ஜே பிரியங்காவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மணிமேகலை தொகுத்து வழங்கி வந்த நிலையில் பிரியங்கா தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும் அதனால் அவர் விஜய் டிவியில் இருந்து விலகியதாகவும் பேச்சுக்கள் இருந்தன.

அதை நிரூபிக்கும் வகையில் பிறகு மணிமேகலையே ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதிலிருந்து சர்ச்சை துவங்கி பெரிதாக வெடித்து வந்து கொண்டிருந்தது.

வி.ஜே விஷாலின் கருத்து:

இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வரும் வி.ஜே விஷால் இது பற்றி கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ஒரு நிகழ்ச்சியில் சக ஊழியர்களுடன் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அதை வெளியில் சென்று கூறக்கூடாது.

manimegalai

manimegalai

பிடிக்கவில்லை என்றால் அமைதியாக விலகிவிட வேண்டும் ஆனால் மணிமேகலை அதை ஒரு வீடியோவாக போட்டார். இருந்தாலுமே கூட பிரியங்கா அதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை. அவர் நாகரிகமாக விலகிவிட்டார் என்று கூறியிருந்தார் விஜே விஷால்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் மணிமேகலை தற்சமயம் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் அதில் அவர் கூறும் பொழுது தீமையை எப்பொழுதும் வெளியே கொண்டு வர வேண்டும் நன்மைக்கு ஆதரவாக தனியாக நின்று போராடுவதற்கு முதலில் ஒரு தனிப்பட்ட தைரியம் தேவைப்படுகிறது என்று பதிவிட்டு இருக்கிறார்

To Top