Cinema History
நிஜமாவே வாழ்ந்த ஆளோட கதாபாத்திரம்தான் அந்த சூர்யா கேரக்டர்!.. மணிரத்தினம் செய்த சம்பவம்!.
தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் எவ்வளவோ திரைப்படங்கள் வந்துள்ளன. அப்படியாக திரையில் வெளியாகி ஹிட் கொடுத்த மல்டி ஸ்டார் திரைப்படம்தான் ஆய்த எழுத்து. அமெரோஸ் பெரோஸ் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தை தழுவிதான் ஆய்த எழுத்து எடுக்கப்பட்டது என ஒரு வாதம் உண்டு.
ஏனெனில் அந்த படத்திலும் ஒரு கார் விபத்தை மையமாக வைத்துதான் கதை செல்லும். ஆனால் மணிரத்தினம் இயக்கிய ஆய்த எழுத்து திரைப்படத்தை பொறுத்தவரை அதில் கதை அம்சங்கள் மொத்தமாக மாறியிருக்கும்.

அதில் வரும் சூர்யாவின் கதாபாத்திரம் ஜார்ஜ் ரெட்டி என்பவரின் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. கல்லூரியில் படிக்கும் ஜார்ஜ் ரெட்டி மார்க்ஸின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கல்லூரியிலேயே சமூக பாகுபாடுகளுக்கு எதிராக போராடியுள்ளார்.
அதன் பிறகு கல்லூரியில் நடந்த ஒரு பிரச்சனையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நியுக்ளியர் ஃபிசிக்சில் கோல்டு மெடலிஸ்டான இவர் ஒரு கிக் பாக்சரும் கூட அதனால்தான் ஆய்த எழுத்து படத்தில் சூர்யா கிக் பாக்ஸர் போலவே சண்டையிடுவார். இப்படி ஜார்ஜ் ரெட்டியைதான் ஆய்த எழுத்தில் கதாநாயகன் ஆக்கியிருப்பார் மணிரத்தினம்.
