என் படத்துக்கு முதல் காட்சிக்கு போனப்ப அவமானப்படுத்தி அனுப்பிட்டாங்க!.. இயக்குனர் மணிரத்தினத்திற்கு நடந்த சம்பவம்!..

Director Maniratnam : தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் மக்களால் புகழப்படும் ஒரு இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். மணிரத்தினம் தமிழ் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் அவருக்கு உடனே வரவேற்பு கிடைக்கவில்லை.

முதலில் வந்த சில திரைப்படங்கள் அவருக்கு தோல்வியைதான் கொடுத்தன. இருந்தாலும் அவரது திரைக்கதை அமைப்பை பார்க்கும் இப்போதைய தலைமுறையினர் மணிரத்தினம் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை புரிந்து கொண்டனர் என்று கூறலாம். அதனால்தான் இரண்டு தலைமுறையை தாண்டிய பிறகும் கூட மணிரத்தினத்திற்கு இருக்கும் வாய்ப்பும் வரவேற்பும் இன்றும் தமிழ் சினிமாவில் குறையாமல் இருக்கிறது.

இயக்குனர் இமையம் பாரதிராஜாவிற்கு கூட இத்தனை காலங்கள் வரவேற்பு இருக்கவில்லை. மணிரத்தினம் எப்போதுமே தன்னுடைய படத்தின் முதல் காட்சிக்கு செல்ல மாட்டாராம். அது ஏன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் மணிரத்தினம் மௌனராகம் என்ற திரைப்படத்தை இயக்கிய பொழுது அந்த திரைப்படத்தின் முதல் காட்சியை சென்று பார்க்கலாம் என்று ஒரு திரையரங்கிற்கு சென்றுள்ளார்.

Social Media Bar

அப்பொழுது அந்த திரையரங்கில் கூட்டமே இல்லை குறைவான அளவில்தான் ஆட்கள் இருந்திருக்கின்றனர். படம் முடிந்து வெளியே வந்த ஒரு நபர் பேசும்போது அந்தப் பெண் நாலு அடியை போட்டு இருந்தாலே படத்தின் கதை முடிந்திருக்கும் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

அப்பொழுது மணிரத்தினத்திற்கு அவமானமாக இருந்திருந்தாலும் கூட வீட்டுக்கு வந்து யோசித்த பொழுது அப்படியும் ஒரு பார்வை அந்த படத்திற்கு இருப்பதை அவர் உணர்ந்து கொண்டார். அது முதல் எந்த ஒரு படத்திற்கும் முதல் காட்சிக்கு அவர் திரையரங்கிற்கு செல்வதே இல்லையாம்.