ரவுடி வீட்டுக்கு போன மணிரத்தினம்… ரவுடி கேட்ட கேள்வி.. ஆடிப்போன இயக்குனர்.!

இயக்குனர் மணிரத்தினம் தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கிய ஒரு இயக்குனராக பார்க்கப்படுகிறார். அவர் இயக்கிய நாயகன் தளபதி மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் இப்பொழுதும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படும் திரைப்படங்களாக இருக்கின்றன.

மற்ற இயக்குனர்களில் இருந்து மாறுபட்ட திரைப்படங்களை இயக்கும் ஒரு இயக்குனராக மணிரத்தினம் இருந்தார். அதனாலேயே அவரது திரைப்படங்களுக்கு தனி வரவேற்பு இருந்தது. இப்பொழுதும் மணிரத்தினம் திரைப்படம் என்றால் அதற்கென்று ஒரு ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.

மணிரத்தினம் திரைப்படம்:

maniratnam
maniratnam
Social Media Bar

இந்த நிலையில் நாயகன் திரைப்படத்தின் போது நடந்த அனுபவங்களை அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். வரதராஜன் முதலியார் என்கிற ஒரு நிஜ ரவுடியின் கதையை அடிப்படையாகக் கொண்டுதான் நாயகன் திரைப்படத்தின் திரைகதையை மணிரத்தினம் எழுதினார்.

இதற்காக ஒருமுறை வரதராஜன் முதலியாரை நேரில் சந்திப்பதற்காக அவர் சென்றிருந்தார். அப்பொழுது அவரிடம் பேசிய வரதராஜன் முதலியார் கூறும் பொழுது நிறைய பேர் என்னிடம் இதே போல கதை கேட்டு வருகின்றனர். ஆனால் நான் கதையை கூறிய பிறகு படங்களில் என்னை வில்லனாக தான் காட்டுகின்றனர்.

நீங்களும் அதுபோல் காட்டுவதற்கு தானே கதையை கேட்கிறீர்கள் பரவாயில்லை எப்படி காட்ட வேண்டும் என்பது உங்களுடைய விருப்பம் தான் என்று கூறினார் வரதராஜன். ஆனால் நாயகன் திரைப்படத்தைப் பொறுத்தவரை அந்த கதாபாத்திரத்தை கதாநாயகனாகதான் காட்டியிருந்தார் மணிரத்தினம்.