Connect with us

கொலை பண்றவங்கள நல்லவன்னு காட்டுவாரு!.. கமல்க்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்… மணிவண்ணன் கொடுத்த அட்வைஸ்!..

kamalhaasan manivannan

Cinema History

கொலை பண்றவங்கள நல்லவன்னு காட்டுவாரு!.. கமல்க்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்… மணிவண்ணன் கொடுத்த அட்வைஸ்!..

Social Media Bar

Kamalhaasan Manivannan: தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். சிவாஜி கணேசனுக்கு பிறகு இவரே ஒரு சிறந்த நடிகராக பார்க்கப்படுகிறார். சினிமாவில் முதன் முதலாக களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் திரைப்படங்களை பொது சமூகம் பார்க்கும் விதத்தில் இருந்து முற்றிலுமாக மாறுப்பட்ட விதத்தில் பார்த்தவர் மணிவண்ணன். அவர் தனது பேட்டி ஒன்றில் கூறும்போது திரைப்படங்களில் கமல் பயன்படுத்திய அரசியலை வெளிப்படுத்தி பேசியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது கமல்ஹாசன் பிறப்பால் ஒரு ஐயங்கார். அதனால் அவர் தேவைப்படும்போது பெரியாரியம் சாதி மறுப்பு எல்லாம் பேசுவார். அதையெல்லாம் நம்பாதீர்கள். அவரது படங்கள் முழுக்க தன் சாதி சார்ந்த விஷயங்களை அவர் வைத்திருப்பார்.

ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து அமெரிக்கா செய்யாத அட்டூழியம் கிடையாது. பல பெண்களையும், குழந்தைகளையும் கொத்து கொத்தாக கொன்றுள்ளனர். ஆனால் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் அமெரிக்கா இராணுவம் ஆப்கானிஸ்தானில் பெண்களையும், குழந்தைகளையும் காப்பாற்றுவதாக காட்சி வைத்திருப்பார்.

அதே போல அவரது திரைப்படங்களில் தொடர்ந்து வைணவத்திற்கு ஆதரவான விஷயங்களை பார்க்க முடியும். தசாவதாரம் என பெயர் வைத்த கமல் ஏன் வேறு எந்த கடவுள்கள் குறித்தும் படம் பெயர் வைக்கவில்லை. விஸ்வரூபம் என வைப்பார். ஆனால் அவர் சிவரூபம் என பெயர் வைக்க மாட்டார். அதுதான் கமல், எனவே கமல்ஹாசனிடம் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார் மணிவண்ணன்.

To Top