தற்சமயம் வேட்டையன் துணிவு மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறியிருப்பவர் மஞ்சு வாரியர்.
சிறுவயது முதலே மலையாளத்தில் நடித்து வந்த மஞ்சுவாரியார் பிறகு திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விட்டார். பிறகு பல வருடங்கள் இடைவெளி விட்டு மீண்டும் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார் மஞ்சு வாரியார்.
இந்த காலங்களில் அவரது வாழ்க்கையில் சோக காலங்கள் என்று தான் கூற வேண்டும். திலீப் குமார் என்கிற நடிகரை தான் திருமணம் செய்தார் நடிகை மஞ்சு வாரியார்.

ஆனால் அவரது கணவர் மிகவும் மோசமானவராக இருந்தார். மேலும் அவர் மஞ்சுவாரியரின் தோழி ஒருவருடன் உறவில் இருந்தார். இந்த விஷயத்தை அறிந்த மஞ்சுவாரியர் தனது கணவரை விவாகரத்து செய்தார்.
மேலும் இப்பொழுது தனித்து வாழ்ந்து வருகிறார் மஞ்சு வாரியர். இதில் கொடுமை என்னவென்றால் மகளும் கூட மஞ்சுவாரியாருக்கு துணையாக இல்லாமல் அவருடைய தந்தையான திலீப் குமாருடன் இருந்து வருகிறார். இவ்வளவு சோகங்களுக்கு நடுவிலும் மஞ்சு வாரியார் அனைவரும் ரசிகம்படியான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.






