Connect with us

உங்க அனுமதி இல்லாமல் வீடியோவை லீக் செஞ்சுடுவேன்.. மஞ்சு வாரியரை மிரட்டிய இயக்குனர்.!

Tamil Cinema News

உங்க அனுமதி இல்லாமல் வீடியோவை லீக் செஞ்சுடுவேன்.. மஞ்சு வாரியரை மிரட்டிய இயக்குனர்.!

Social Media Bar

தமிழ் மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை மஞ்சு வாரியர். தமிழில் துணிவு, வேட்டையன் மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர் அதிக பிரபலமடைந்தார்.

இந்த நிலையில் இவருக்கும் இயக்குனர் சனல்குமார் சசிந்தரனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. மலையாளத்தில் கொஞ்சம் சர்ச்சையான திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக சனல்குமார் சசிந்திரன் இருந்து வருகிறார்.

இவர் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வழக்கு என்கிற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தின் கதை சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அந்த படம் வெளியாவதற்கு முன்பே டொவினோ தாமஸ் பிரபலமான நடிகராக மாறினார்.

எனவே அவர் வழக்கு திரைப்படத்தை வெளியிடுவதில் தயக்கம் காட்டி வந்தார். அந்த திரைப்படம் சர்வதேச கேரள திரைப்பட விழாவில் மட்டுமே வெளியானது. திரையரங்குகளுக்கு வரவே இல்லை. இதனால் கடுப்பான இயக்குனர் சனல்குமார் அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

manju warrier

அது தொடர்பான வழக்கு இன்னமும் சென்று கொண்டுள்ளது. இதற்கு நடுவே நடிகை மஞ்சு வாரியர் தயாரித்து நடித்த காயட்டம் என்கிற திரைப்படத்தை சனல்குமார் இயக்கினார். இந்த படத்தை இயக்கும்போது மஞ்சு வாரியருக்கும் இயக்குனருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் இயக்குனரை வெகு நாட்களாக தொடர்பு கொள்ளாமல் இருந்தார் மஞ்சு வாரியர். இதனை தொடர்ந்து மஞ்சுவாரியர் ஏதோ ஆபத்தில் இருக்கிறார் என வீடியோ ஒன்றை வெளியிட்டார் இயக்குனர் சனல்குமார்.

இதனால் கோபமடைந்த மஞ்சுவாரியர் அவர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த பிரச்சனைகள் இப்படி இருக்க மஞ்சு வாரியர் தயாரித்து நடித்த காயட்டம் திரைப்படம் இன்னமும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இது குறித்து சமீபத்தில் பேசிய இயக்குனர் சனல்குமார் அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட போவதாக கூறினார்.

மஞ்சு வாரியர் தயாரித்த படத்தை அவர் அனுமதி இல்லாமல் இவர் எப்படி லீக் செய்ய முடியும் என இதுக்குறித்து பேச்சுக்கள் இப்போது அதிகமாகியுள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top