News
அந்த காட்சில நடிக்க ரொம்ப கூச்சமா இருந்தது.. வற்புறுத்தி பண்ண வச்சாங்க.. ரகசியத்தை உடைத்த மஞ்சு வாரியர்..!
தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக மஞ்சுவாரியர் இருந்து வருகிறார். மலையாளத்தில் வெகு காலங்களாகவே முக்கியமான கதாநாயகியாக இருந்த மஞ்சு வாரியார் தற்சமயம் தமிழிலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
முதன்முதலாக தமிழில் அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு துணிவு திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. தற்சமயம் ரஜினிக்கு ஜோடியாக வேட்டையன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் மஞ்சு வாரியார்.
துணிவு பட அனுபவம்:
அவர் ஒரு பேட்டியில் பேசும் பொழுது அவரிடம் துணிவு படத்தில் அவரது அனுபவம் குறித்து பேசப்பட்டது. துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியருக்கு ஒரு மாஸ் இன்ட்ரோ காட்சி வைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியில் கையில் துப்பாக்கி இரண்டை வைத்துக்கொண்டு வருவார் மஞ்சு வாரியர்.
அந்த காட்சியில் நடிக்கும் போது எப்படி இருந்தது என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மஞ்சு வாரியர் எனக்கு அந்த காட்சிகளில் நடிக்கு போது மிகவும் வெட்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது.
ஏனெனில் அஜித் மாதிரியான லெஜெண்டுகளுக்கு தான் அந்த மாதிரி காட்சிகள் எல்லாம் வைப்பார்கள். அதை திடீரென்று எனக்கு வைத்தவுடன் அது எப்படி நன்றாக இருக்குமா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது என்று கூறியிருக்கிறார் மஞ்சு வாரியர்.
