அனுமதி வாங்கிதான் ப்ரோ பாட்டை போட்டுருக்கோம்!.. இளையராஜா குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த மஞ்சுமல் பாய்ஸ் க்ரூப்!..
இளையராஜா தமிழ் சினிமாவில் பல காலங்களாக இருந்து வரும் முக்கியமான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இளையராஜாவின் இசைக்காக தமிழ் சினிமாவில் பாடல்கள் வெற்றி பெற்ற காலக்கட்டங்களும் உண்டு.
ஆனால் இப்போது நிறைய இளம் இசையமைப்பாளர்கள் வந்ததால் இளையராஜாவிற்கு அவ்வளவாக வாய்ப்புகள் வருவதில்லை. இந்த நிலையில் தான் இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமை தனக்கே வேண்டும் என்று போராடி வருகிறார் இளையராஜா.
இந்த நிலையில் அவரது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தும் படங்கள் மீதும் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார் இளையராஜா. அப்படியாக தற்சமயம் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் குணா பட பாடலை பயன்படுத்தியிருப்பது குறித்து அவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார் இளையராஜா.

கண்மணி அன்போடு காதலன் என்கிற அந்த பாடல்தான் ஒட்டுமொத்த படத்திற்கே முக்கியமான அம்சமாக அமைந்தது. அதை இயக்குனர் பயன்படுத்தியிருந்த விதமும் நன்றாகவே இருந்தது. இதற்காக கமல்ஹாசன் கூட படக்குழுவினரை அழைத்து பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் இளையராஜா இவ்வளவு தாமதமாக எதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரது கேள்வியாக இருந்தது. இதற்கு தற்சமயம் மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர் பதிலளித்துள்ளார். குணா படத்தின் பாடலின் காப்புரிமையை படத்தின் தயாரிப்பாளரிடம் பெற்ற பிறகுதான் படத்தில் பயன்படுத்தினோம். அனுமதியின்றி எல்லாம் பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளனர்.