Connect with us

அந்த வயசிலையும் ஒரே டேக்கில் பெரிய டயலாக்கை பேசுனாங்க!.. இயக்குனரை வியக்க வைத்த ஆச்சி மனோரமா..

manorama

Cinema History

அந்த வயசிலையும் ஒரே டேக்கில் பெரிய டயலாக்கை பேசுனாங்க!.. இயக்குனரை வியக்க வைத்த ஆச்சி மனோரமா..

Social Media Bar

தமிழில் உள்ள பழம்பெரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மனோரமா. சிவாஜி எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் சினிமாவில் நடிகையாக அறிமுகமான மனோரமா பிறகு பல வருடங்கள் சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

1000க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த மனோரமாவிற்கு நடிப்பு அத்துபடி என்றே கூற வேண்டும். எந்த ஒரு கதாபாத்திரத்தை எடுத்தாலும் அதை மிக சிறப்பாக நடிக்க கூடியவர் மனோரமா. முக்கியமாக அம்மா கதாபாத்திரம் அவருக்கு மிகவும் தொடர்புடைய கதாபாத்திரமாகும்.

அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருக்கும் பொழுது தனது வீடு இடிந்த செய்தி அறிந்து மனோரமா அழும் காட்சி ஒன்று வரும். அந்த காட்சியை அவரை தவிர வேறு யாரும் அவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது.

இந்த நிலையில் இயக்குனர் சிம்பு தேவன் அவரை குறித்த சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை கூறியிருந்தார். 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் மனோரமாவிற்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் நடிக்கும் பொழுது மிகவும் முதியவராக இருந்தார் மனோரமா.

அப்பொழுது அவருக்கு ஒன்றரை பக்க வசனம் ஒன்று இருந்தது அதை மனப்பாடம் செய்ய சொல்லலாம் என்று அந்த பேப்பரை மனோரமாவிடம் கொடுக்கச் சென்றார் சிம்புதேவன். ஆனால் அதை வாங்க மறுத்த மனோரமா அதை ஒரு முறை படித்து காட்டுங்கள் என்று கூறியுள்ளார். சரி என்று சிம்பு தேவன் ஒருமுறை படித்து காட்டியுள்ளார்.

மீண்டும் ஒருமுறை படித்துக் காட்ட சொல்லியுள்ளார் மனோரமா மீண்டும் ஒருமுறை படித்துக் காட்டிய பிறகு வேறு எதுவுமே பேசவில்லை மனோரமா. படத்தின் காட்சியில் சிங்கிள் டேக்கில் அந்த வசனங்களை சரியாக பேசி முடித்தார். இந்த வயதிலும் இப்படி ஒரு ஞாபக சக்தியா என அசந்து போய் உள்ளார் சிம்புதேவன் இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

To Top