Cinema History
அந்த சீனை எடுக்க சாமியே உதவி செஞ்சது!.. தனுஷ் படத்தில் நடந்த சம்பவம்!..
தமிழ் சினிமாவில் வெறும் சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் மட்டும் நடிக்காமல் அவ்வப்போது நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் சில படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.
தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு உண்டு. ஏனெனில் ஒவ்வொரு திரைப்படத்திலும் எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் பல விஷயங்களை செய்யக்கூடியவர் தனுஷ்.
தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் தனுஷிற்கு முக்கியமான திரைப்படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த விந்தையான காட்சி ஒன்றை மாரி செல்வராஜ் பகிர்ந்திருந்தார்.
படத்தில் கழுதை மலை மேல் ஏறி வருவது போன்ற காட்சி எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் கழுதை தானாக மலை மேல் ஏறாது என ஊர்க்காரர்கள் கூறியுள்ளனர். அதே போல கழுதையும் மலை மேல் ஏறாமலே நின்றுள்ளது. இதனால் அந்த காட்சியை எடுப்பது கடினம் என மாரி செல்வராஜும் நினைத்தார். இருந்தாலும் ஒரு முயற்சி செய்வோம் என படத்தில் குல தெய்வமாக வரும் அந்த குழந்தையை தலையில் முகமூடி மாட்டி மலை மேல் நிற்க வைத்துள்ளார்.
அதனை பார்த்த அந்த கழுதை மலைமேல் ஏறி வேக வேகமாக சென்று அந்த குழந்தையின் அருகில் சென்று நின்றுள்ளது. பொதுவாக கழுதைகள் அப்படி செய்யாது என்பதால் அனைவரும் வியப்பாக அந்த நிகழ்வை பார்த்துள்ளனர்.
