எதிர்நீச்சல் 2வில் இருந்த விலக காரணம்? வாயை திறந்த ஜனனி மதுமிதா..!

சன் டிவியில் அதிக பிரபலமாக ஒளிபரப்பான ஒரு சில சீரியல்களில் மிக முக்கியமான சீரியலாக எதிர்நீச்சல் என்கின்ற சீரியல் இருந்தது. பொதுவாக பெண்களை வில்லியாக வைத்துதான் நாடகங்களின் கதை அம்சங்கள் இருக்கும்.

ஆனால் எதிர்நீச்சல் சீரியல்தான் பெண்களுக்கு வில்லன் கதாபாத்திரங்களாக வீட்டில் இருக்கும் கணவர்களையே வைத்தனர். அதனால் அந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதில் ஜனனி என்கிற  மிக முக்கியமான கதாபாத்திரத்தில் மதுமிதா என்கிற நடிகை நடித்திருந்தார். இவர் ஒரு கன்னட நடிகை எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தமிழில் இவருக்கு வரவேற்பு கிடைத்தது.

ஆனால் சில பிரச்சனைகளின் காரணமாக எதிர் நீச்சல் சீரியல் இரண்டு வருடங்களிலேயே முடிந்துவிட்டது. அதற்குப் பிறகு எதிர்நீச்சல் சீரியலை மக்கள் அதிகமாக எதிர்பார்த்த காரணத்தினால் மீண்டும் அதன் இரண்டாம் பாகம் இப்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.

ஆனால் அதில் ஜனனி கதாபாத்திரத்தில் வேறு ஒரு பெண் நடித்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் இது குறித்து மதிமிதாவிடம் கேட்டிருந்தனர். அதற்கு பதில் அளித்த மதுமிதா இது குறித்து அடுத்து லைவில் நான் பேசும்பொழுது கூறுகிறேன் என்று கூறியிருக்கிறார்.