Bigg Boss Tamil
என்ன தொடுறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு!.. பிரதீப் மாதிரியே தினேஷை கட்டம் கட்டும் மாயா!.. ஆண்டவர் என்ன சொல்ல போறார்!.
Biggboss tamil maya and Dinesh: வைல்ட் கார்டு மூலமாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களில் அர்ச்சனா மற்றும் தினேஷ் இருவரும் கொஞ்சம் சக்தி வாய்ந்த போட்டியாளர்களாக இருக்கின்றனர்.
அவர்கள் இருவருக்குமே மக்கள் மத்தியிலும் பெருவாரியான வரவேற்புகள் இருக்கின்றன. எனவே அவர்களை தோற்கடிப்பதுதான் பழைய போட்டியாளர்களுக்கு முக்கியமான வேலையாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று விஷ்ணுவிற்கும் அர்ச்சனாவிற்கும் நடந்த சண்டையில் அர்ச்சனா அழ துவங்கி விட்டார் அதனை தொடர்ந்து விஷ்ணுவிற்கு எதிர்ப்பு குரல்கள் அதிகமாக வருகின்றன.
அதே சமயம் அர்ச்சனா நடிக்கிறார் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் பிரதீப்பை மொத்தமாக குற்றம் சாட்டி பிக் பாஸிலிருந்து தூக்கியது போல தினேஷையும் தூக்குவதற்கான வேலை நடக்கிறதோ என்கிற பேச்சும் சமூக வலைத்தளங்களில் உலாவி வருகிறது.

ஏனெனில் இன்றைய ப்ரோமோவில் பார்க்கும் பொழுது டாஸ்கின் படி அனைவரும் கையை கட்டிக் கொண்டு இருக்க வேண்டும். அதற்காக மாயாவின் கையில் தினேஷ் கயிறை மாட்டும் பொழுது அந்த கயிறை இறுக்கமாக மாட்டினார்.
ஆனால் அவர் தனது கையைப் பிடித்து விட்டார் என்று மாயா அதை தவறாக சித்தரித்தார். மேலும் என்னை தொடுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும் சத்தம் போட்டு உள்ளார். இதனால் கடுப்பான தினேஷ் கிளம்பி சென்று விட்டார் இந்த நிலையில் பிரதீப் போலவே பெண்களின் பாதுகாப்பிற்கு தினேஷ் பிரச்சனையாக இருக்கிறாள் என்று புது புரளியை இவர்கள் கிளப்புவார்களோ என்று மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன
