Connect with us

ரஜினியை காபி அடிக்கிறதுதான் அவருக்கு வேலை!.. விஜய் செயலால் கடுப்பான மீசை ராஜேந்திரன்.

Cinema History

ரஜினியை காபி அடிக்கிறதுதான் அவருக்கு வேலை!.. விஜய் செயலால் கடுப்பான மீசை ராஜேந்திரன்.

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான நடிகர்களில் நடிகர் விஜய்க்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு. தற்சமயம் உள்ள டாப் நடிகர்களில் அவரும் ஒருவர். சம்பள அளவில் பார்க்கும்போது தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார்.

ஆனால் விஜய் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுவதாக சில பேச்சுக்கள் வலம் வருகின்றன. அதற்கு தகுந்தாற் போல சரத்குமார் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது எனக்கு சூர்ய வம்சம் காலக்கட்டத்திலேயே தெரியும் என கூறியிருந்தார்.

அதை மறுத்து விஜய்யும் எதுவும் பேசாமல் இருந்தார். அடுத்ததாக மாவீரன் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயனும் தன்னை குட்டி ரஜினிகாந்த் என கூறிக்கொண்டார். இந்த நிலையில் இவர்களை எல்லாம் தாக்கும் விதமாக ஜெயிலர் படத்தில் வரும் டைகர் ஹா ஹக்கும் பாடலில் வரிகளை வைத்திருந்தார் ரஜினிகாந்த்.

மேலும் இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு கதையை கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய் இப்படி செய்வது சரியா? என்பது குறித்து நடிகர் மீசை ராஜேந்திரனிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் பேசிய மீசை ராஜேந்திரன் விஜய் செய்வது மிகவும் தவறு. அவர் எப்போதுமே அடுத்தவர் பட்டத்துக்குதான் ஆசைப்படுகிறார்.

அவர் வைத்திருக்கும் தளபதி என்னும் பட்டமே ஏற்கனவே அரசியலில் ஒரு தலைவர் வைத்திருக்கும் பட்டம்தான். அவர் இசை வெளியீட்டு விழாக்களில் பேசுவதில் துவங்கி, குட்டி கதைகள் கூறுவது வரை அனைத்திலும் நடிகர் ரஜினிகாந்தைதான் காபி அடிக்கிறார். இப்படி செய்வது தவறானது என கூறியுள்ளார் மீசை ராஜேந்திரன்.

To Top