Connect with us

சந்திரமுகி ஓடுறது கஷ்டம்!.. வடிவேலு படத்தை கெடுத்துட்டார்!.. ஓப்பன் டாக் கொடுத்த மீசை ராஜேந்திரன்!..

meesai rajendran chandramukhi 2

Tamil Cinema News

சந்திரமுகி ஓடுறது கஷ்டம்!.. வடிவேலு படத்தை கெடுத்துட்டார்!.. ஓப்பன் டாக் கொடுத்த மீசை ராஜேந்திரன்!..

Social Media Bar

ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு முக்கியமான படங்களாக இருந்த சில படங்களில் சந்திரமுகிக்கும் முக்கிய பங்குண்டு. பாபா படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படம் நடிப்பதற்கு உதவியது சந்திரமுகி திரைப்படம்.

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடி பெரும் ஹிட் கொடுத்தது, அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்காக இயக்குனர் பி.வாசு வெகு நாட்களாக காத்திருந்தார். ஆனால் ரஜினிக்கு தொடர்ந்து வேறு படங்களில் நடிப்பதற்கான வேலைகள் இருந்ததால் தற்சமயம் லாரன்ஸை வைத்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்கி வெளியிட்டுள்ளார் வாசு.

இந்த படம் குறித்து பிரபல தமிழ் நடிகர் மீசை ராஜேந்திரன் கூறும் பொழுது வேட்டையனாக ரஜினிகாந்த் நடித்த பொழுது மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த இடத்தில் லாரன்ஸை வைத்து என்னால் கண்டிப்பாக பார்க்க முடியவில்லை. லாரன்ஸ் ஒரு நல்ல நடிகர் என்றாலும் கூட ரஜினி அளவிற்கு அவரால் ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியாது.

அதேபோல வடிவேலுவின் காமெடிகள் படத்தில் சிரிப்பே வராத வகையாக இருக்கின்றன. வடிவேலுவின் காமெடியாலேயே இந்த திரைப்படம் ஓடாமல் போகப்போகிறது என்று அவர் தனது பேட்டியில் கூறியிருந்தார்.

To Top