Connect with us

மெய்யழகன்ல அந்த விஷயம் எல்லாம் பொய்.. சர்ச்சை கிளப்பிய நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்.

director premkumar

Tamil Cinema News

மெய்யழகன்ல அந்த விஷயம் எல்லாம் பொய்.. சர்ச்சை கிளப்பிய நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்.

Social Media Bar

Meiyazhagan is a recently released Tamil movie directed by Premkumar. The director has responded to the negative reviews about this film

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இப்பொழுது இயக்குனராக அதிக வரவேற்பு பெற்று வருபவர் இயக்குனர் பிரேம்குமார். அவருடைய முதல் திரைப்படமான 96 திரைப்படம் மூலமாகவே எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றார் பிரேம்குமார்.

எல்லா காலங்களிலுமே மனிதர்களுக்கு மறக்க முடியாத காதலாக தன்னுடைய முதல் காதல்தான் இருக்கும். அதனை வெளிப்படுத்தும் விதமாக அந்த திரைப்படம் அமைந்திருந்ததால் உணர்வுபூர்வமாக அனைவருடனும் தொடர்புடைய ஒரு படமாக 96 இருந்தது.

அதனை தொடர்ந்து இரண்டாவதாக இப்பொழுது பிரேம்குமார் இயக்கி இருக்கும் திரைப்படம் மெய்யழகன். இந்த திரைப்படமும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் கூட மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

இயக்குனர் சொன்ன விஷயம்:

சொந்தங்களுக்கு இடையே இருக்கும் உணர்வுபூர்வமான விஷயங்களை கையாண்டு இருக்கிறது மெய்யழகன் திரைப்படம். அதனாலயே நிறைய பேருக்கு இந்த படம் பிடித்திருக்கிறது. ஆனாலும் ஒரு பக்கம் கார்த்தியின் அந்த கதாபாத்திரம் ஒரு சிலருக்கு நெருடலை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து நெட்டிசன்கள் கூறும் பொழுது இவ்வளவு நல்ல உறவினர்கள் எல்லாம் யாருக்கும் இருப்பது கிடையாது. இது ஒரு கற்பனை தான் என்றெல்லாம் கூறி வந்தனர். இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியிருந்த பிரேம்குமார் கூறும் பொழுது எனது வாழ்வில் இரண்டு நபர்களை அந்த கார்த்தி கதாபாத்திரம் போலவே நான் பார்த்திருக்கிறேன். அவர்களை அடிப்படையாக வைத்து தான் மெய்யழகன் என்கிற அந்த கதாபாத்திரத்தை உருவாக்கினேன் என்று பதில் அளித்து இருக்கிறார்.

To Top