இப்பயும் சொல்றேன்… லியோவால் ஜெயிலர் கலெக்சனை தொடவே முடியாது!.. ஸ்ட்ரிக்டாக கூறிய மீசை ராஜேந்திரன்!..
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட மக்கள் மத்தியில் தனது முகத்தை பதிவு செய்து கொண்டவர் நடிகர் மீசை ராஜேந்திரன்.
இப்போது இந்த மாதிரியான சின்ன நடிகர்கள் எல்லாம் யூட்யூபில் அதிகமாக பேட்டி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சினிமாவில் கிடைக்கும் சம்பளத்தை விடவும் youtube இல் அவர்களுக்கு அதிகமான வருமானம் கிடைப்பதால் தொடர்ந்து youtube-ல் இவ்வாறு சினிமா தொடர்பான விஷயங்களை பேசி வருகின்றனர்.

சினிமாவில் மக்களுக்கு தெரியாத பல விஷயங்கள் அவர்களுக்கு தெரியும் என்பதால் அவர்களுடைய பேட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படம் வந்த பொழுது மீசை ராஜேந்திரன் பேட்டியில் பேசிய பொழுது லியோ திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை தாண்டாது அப்படி ஒருவேளை தாண்டி விட்டால் நான் எனது மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று சபதம் விட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மட்டும் லியோ திரைப்படம் 100 கோடிக்கு ஓடி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே மீண்டும் மீசை ராஜேந்திரனை பேட்டி எடுக்கும் பொழுது எப்போது சார் மீசையை எடுக்கப் போகிறீர்கள் என்று நிருபர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த மீசை ராஜேந்திரன் இப்பொழுதும் கூறுகிறேன் நெல்சனின் ஜெயிலர் திரைப்படத்தை லியோவால் தாண்டவே முடியாது ஏனென்றால் லியோ திரைப்படம் அவ்வளவாக நன்றாக இல்லை படத்தில் பெரிய நடிகர்கள் பலரை நடிக்க வைத்திருந்தாலும் அவர்களுக்கு மதிப்பு கொடுக்கப்படவில்லை. அவர்களது கதாபாத்திரம் பெரிதாக கவனிப்பை ஈர்க்கும் வகையில் இல்லை.
முக்கியமாக அர்ஜுன் மாதிரியான நடிகர்கள் கூட ஏதோ துணை கதாபாத்திரம் போல ஓரமாகவே நிற்கின்றனர் எனவே இந்த படம் அந்த அளவிற்கு வசூல் சாதனை படைக்காது என கூறியுள்ளார் மீசை ராஜேந்திரன்.