உலகம் முழுக்க பிரபலமான ஹாலிவுட் கதையில் நடித்த எம்.ஜி.ஆர்!.. மாஸ் ஹிட் கொடுத்த படம்..
தமிழ் சினிமாவில் இப்போது உள்ளதை விடவும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் புதுப்புது கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.
ஏனெனில் எந்த வகையான சினிமாக்கள் மக்களுக்கு பிடிக்கும் என்பதில் இயக்குனர்களுக்கே ஐயம் இருந்தது. மேலும் அனைத்து வகை திரைப்படங்களையும் அப்போது இருந்த சினிமா ரசிகர்கள் பார்த்தனர். 1919 இல் ஒரு ஆங்கில எழுத்தாளரால் எழுதப்பட்ட கதை தான் சோரோ.
காட்டில் பதுங்கி வாழும் புரட்சியாளன் மக்களுக்கு நன்மை செய்வது போன்ற கதைகளை கொண்ட அந்த கதையை அடிப்படையாகக் கொண்டு அப்போது ஹாலிவுட்டில் எக்கச்சக்கமான திரைப்படங்கள் வந்தது.
அந்த கதையை பார்த்து பிடித்துப் போன நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அதை மலைக்கள்ளன் என்ற பெயரில் தமிழில் கதை ஆக்கினார். தமிழில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்ற மலைக்கள்ளன் 1950 களில் பள்ளி பாடபுத்தகத்தில் கதையாக இருந்தது.
இதனை அடுத்து அதை படமாக்க வேண்டும் என்று நினைத்த ஸ்ரீ ராமு நாயுடு அதற்காக சிவாஜி கணேசனை தேர்ந்தெடுத்தார். ஆனால் சில காரணங்களால் சிவாஜி கணேசன் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே அதன் கதாநாயகனாக எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கருணாநிதியின் வசனத்தில் உருவான மலைக்கள்ளன் மேலும் சிறப்பான ஒரு திரைப்படமாக அமைந்தது. அந்த படம் வெளியான பிறகு எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயிண்டாக மலைக்கள்ளன் திரைப்படம் அமைந்தது.
