Connect with us

வாலிக்கு தராத மரியாதையை எனக்கும் தர தேவையில்லை!.. தயாரிப்பாளரையே மிரள வைத்த எம்.ஜி.ஆர்!..

vali mgr

Cinema History

வாலிக்கு தராத மரியாதையை எனக்கும் தர தேவையில்லை!.. தயாரிப்பாளரையே மிரள வைத்த எம்.ஜி.ஆர்!..

Social Media Bar

Actor MGR: தமிழ் சினிமா நடிகர்களிலேயே மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கை பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு அப்போதெல்லாம் எக்கச்சக்கமான வரவேற்பு உண்டு. இதனாலேயே எம்.ஜி.ஆர் அவரது திரைப்படங்களில் அதிகம் விதிமுறைகளை போட்ட போதும் கூட அவரை வைத்து திரைப்படமெடுக்க இயக்குனர்கள் தயாராக இருந்தனர்.

எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவர் நடிக்கும் திரைப்படங்களில் அனைத்து விஷயங்களையும் அவர்தான் முடிவு செய்வார். அந்த படத்தின் பாடலில் துவங்கி நடிக்கும் நடிகர்கள், படத்தின் கதை என எல்லாமே எம்.ஜி.ஆரின் விருப்பத்திற்கு தகுந்தாற் போலவே அமைய வேண்டும்.

இதனால்தான் அப்போது பெரும் நிறுவனமாக இருந்தப்போதும் கூட ஏ.வி.எம் நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்து அதிகமாக திரைப்படங்கள் தயாரிக்கவில்லை. எம்.ஜி.ஆர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்த வரிசையில் நம் நாடு திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு தகுந்த மாதிரி அந்த திரைப்படம் அமைந்ததால் பெரும் வெற்றியை கண்டது நம்நாடு திரைப்படம். எனவே இந்த திரைப்படத்திற்காக வெற்றி விழாவை நடத்த தயாரிப்பாளர் முடிவு செய்தார்.

அப்போது படத்திற்கு இசையமைத்த எம்.எஸ்.விக்கு விமானத்தில் டிக்கெட் போட்ட தயாரிப்பு குழு படத்தில் பாடல் வரிகளை எழுதிய வாலிக்கு மட்டும் ரயிலில் டிக்கெட் போட்டனர்.  இதனால் வாலி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்.

எனவே எம்.ஜி.ஆருக்கு போன் செய்த வாலி விவரங்களை கூறி நம் நாடு வெற்றி விழாவிற்கு வர முடியாது என கூறிவிட்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் எம்.ஜி.ஆருக்கு கடும் கோபம் வந்துவிட்டது. உடனே தயாரிப்பு குழுவிற்கு போன் செய்து அவரும் வெற்றி விழாவிற்கு வர முடியாது என கூறிவிட்டார்.

அதன் பிறகு விவரத்தை அறிந்த தயாரிப்பு குழுவினர் பிறகு வாலிக்கும் விமானத்தில் டிக்கெட் போட்டு கொடுத்துள்ளனர். அந்த அளவிற்கு வாலிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர்.

To Top