நண்பனின் பெண்ணை ஏமாற்றியதற்காக பிரபல நடிகரை பழி வாங்கிய எம்.ஜி.ஆர்!.. தலைவரு அலப்பறை..
திரைத்துறையில் முக்கிய புள்ளியாகவும் பெரிய கமர்சியல் கதாநாயகனாகவும் இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். தனது திரைப்படங்களின் வழியாக மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை சொல்ல முயற்சி செய்தவர் எம்.ஜி.ஆர்.
அதேபோல எப்பொழுதும் அவரது திரைப்படத்தில் மக்களுக்கு உதவும் நாயகனாகத்தான் எம்.ஜி.ஆரும் வருவார் அவரது படங்களில் சிகரெட் பிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளில் எம்.ஜி.ஆர் நடிக்க மாட்டார் அதேபோல மூடநம்பிக்கைகளை ஏற்படுத்தும் பேய் படங்களிலும் நடிக்க மாட்டார்.
இப்படியான பல கொள்கைகளை கொண்டவர் எம்.ஜி.ஆர். அதே சமயம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட ஹீரோ மாதிரியான பல விஷயங்களை செய்துள்ளார். அவையெல்லாம் திரைப்படங்களை தாண்டிய விஷயங்களை ஆகும். உதாரணத்திற்கு எம்.ஜி.ஆரின் முக்கியமான நண்பராக இருந்தவர் உடையார்.
இறக்கும் வரையில் அவருடன் கூடவே இருந்தவர் உடையார். அவருக்கு ஒரு மகள் உண்டு. அவரை நடிகர் சுமன் காதலித்து வந்தார் காதலித்தவர் அவளை கல்யாணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டு தெலுங்கு சினிமாவிற்கு சென்றுவிட்டார். தெலுங்கு சினிமாவில் அவர் கொஞ்சம் பிரபலமானவர் அவரது திரைப்படங்கள் அதிகமாக வெற்றி பெற்றுக் கொண்டிருந்தன.

எனவே சுமனை எதிர்த்தால் அது அங்குள்ள தயாரிப்பாளர்களை பெரிதாக பாதிக்கும் என்ற ஐயம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது இருந்தாலும் எம்ஜிஆர் இது குறித்து பேசுவோம் என்று என்.டி.ஆருக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூறியுள்ளார்.
அதனை கேட்ட என்.டி.ஆர் உங்களுக்கு விருப்பம் என்றால் அவனை என்ன வேணும்னாலும் செய்து கொள்ளுங்கள் நான் கேட்க மாட்டேன் என்று கூறிவிட்டார். உடனே எம்.ஜி.ஆர் காவல்துறையை பயன்படுத்தி சுமனை கைது செய்து அழைத்து வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி சுமனிடம் கேட்டார் எம்.ஜி.ஆர்.
ஆனால் சுமன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவே திரும்ப சுமன் சினிமாவிலேயே நடிக்க முடியாதபடி செய்தார் எம்.ஜி.ஆர் இந்த விஷயத்தை பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
