Cinema History
வெளிநாடே போகாமல் வெளிநாட்டு காட்சி எடுக்கப்போறோம்… எம்.ஜி.ஆரின் ஆலோசனையால் ஆடி போன நம்பியார்..
சாதாரண நாடக நடிகராக இருந்து அதன் பிறகு வளர்ச்சி அடைந்து தமிழகத்தில் பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி மக்களுக்கு பல நன்மைகளை செய்ததால் அவருக்கு பாமர மக்கள் மத்தியில் எப்போதுமே ஒரு செல்வாக்கு இருந்து வந்தது.
அதை எல்லாம் தாண்டி சில திரைப்படங்களை எம்.ஜி.ஆர் தயாரித்தும் உள்ளார். அதேபோல இயக்குனராகவும் சிறப்பாக ஒரு படத்தை அவர் இயக்கினார். அதுதான் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம்.
தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக பல நாடுகளை காட்டும் திரைப்படமாக உலகம் சுற்றும் வாலிபன் இருந்தது. மேலும் அப்போதைய கால கட்டத்திலேயே மிகப்பெரும் பட்ஜெட்டில் அந்த படம் எடுக்கப்பட்டது. படம் வெளியானபோது படம் எடுத்ததை விட அதிகமாகவே வசூல் செய்தது. பல நாடுகளுக்கு சென்று அந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்தார் எம்.ஜி.ஆர்.
ஆனால் படத்தை ஆரம்பிக்கும் பொழுது அதில் நம்பியாரை சேர்ப்பதற்கான யோசனை எம்.ஜி.ஆருக்கு இல்லை. ஏனெனில் படத்தின் வில்லனாக அசோகன்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இருந்தாலும் படத்தில் நம்பியார் இல்லாதது எம்.ஜி.ஆருக்கு ஒரு உறுத்தலாகவே இருந்தது. எனவே படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு வந்த எம்.ஜி.ஆர் நம்பியாரிடம் உங்களையும் படத்தில் சேர்க்கலாம் என்று இருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதை கேட்டதும் நம்பியாருக்கு ஒரே அதிர்ச்சி, படப்பிடிப்பே முழுதாக முடிந்து விட்டது. மீண்டும் என்னை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று காட்சிகளை படம் பிடிக்க போகிறீர்களா? என கேட்டுள்ளார் நம்பியார்.
இல்லை வெளிநாடு செல்லாமலே வெளிநாட்டு காட்சிகளை எடுக்கப் போகிறோம் என கூறிய எம்.ஜி.ஆர், அதிகபட்சம் பொது வெளியில் படத்தை எடுக்காமல் நம்பியாருக்கான காட்சிகளை அதிகப்பட்சம் வீட்டுக்குள்ளேயே இருப்பது போல வைத்து படமாக்கினார். நிறைய படங்கள் எடுத்தது கிடையாது என்றாலும் கூட படம் இயக்குவதில் உள்ள சூட்சுமத்தை அப்போதே அறிந்திருந்தார் எம்.ஜி.ஆர்.
