Cinema History
முதலமைச்சர் ஆனதுக்காக அந்த வேலையெல்லாம் பார்க்க முடியாது… அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த எம்.ஜி.ஆர்!..
தமிழ் திரையுலகில் திரையில் மட்டும் கதாநாயகனாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் மக்கள் மத்தியில் கதாநாயகனாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பொதுவாகவே எம்.ஜி.ஆர் அவர் நடிக்கும் திரைப்படங்களில் ரிக்ஷா காரன், மீனவர் என பாமர மக்களின் பாத்திரத்தை எடுத்தே நடித்திருப்பார்.
அதனாலேயே அவருக்கு பாமர மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பொதுவாக எம்.ஜி.ஆர் படம் வெளியாகிறது என்றாலே அதை வெற்றி படமாக்குவது கீழ்த்தட்டு மக்கள்தான். இதனை தொடர்ந்து அரசியலில் இருந்த எம்.ஜி.ஆருக்கு தி.மு.க கட்சியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனியாக கட்சி துவங்கினார் எம்.ஜி.ஆர்
அடுத்த தேர்தலிலேயே எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். இந்த நிலையில் முதலமைச்சர் ஆன பிறகு அவரது ராமாபுரம் தோட்டத்திற்கு அதிகமான மக்கள் வர துவங்கினர். அவர்கள் எம்.ஜி.ஆரை பார்த்து மனு கொடுக்கவே அப்படி வந்தனர். எம்.ஜி.ஆர் தினமும் மக்களை சந்திக்க குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி இருந்தார்.

இந்த நிலையில் மக்கள் அவரை சந்திக்க அதிகமாக வருவதை பார்த்த அதிகாரிகள் அந்த கூடத்தை இடித்து பெரிதாக கட்ட முடிவெடுத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் அதை முழுவதுமாக மறுத்துவிட்டார். முதலமைச்சர் ஆவதற்கு முன்பு நான் எப்படி இருந்தேனோ அப்படிதான் இப்பயும் இருக்க வேண்டும்.
இப்போது நான் புதிதாக கட்டிடத்தை இடித்து கட்டினால் நான் முதலமைச்சர் ஆனதுமே மக்கள் காசில் வீட்டை இடித்து கட்டிவிட்டேன் என்று பேசுவார்கள் எனவே எனக்கு அந்த மாதிரி எந்த ஒரு விஷயமும் செய்ய வேண்டாம் என மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.
