Connect with us

திருட்டு கல்யாணம் பண்ணனும் நீதான் உதவணும்… இக்கட்டான சூழ்நிலையில் அசோகனுக்கு உதவிய எம்.ஜி.ஆர்

MGR ashokan

Cinema History

திருட்டு கல்யாணம் பண்ணனும் நீதான் உதவணும்… இக்கட்டான சூழ்நிலையில் அசோகனுக்கு உதவிய எம்.ஜி.ஆர்

Social Media Bar

Actor MGR and Ashokan : தமிழ் சினிமாவில் என்னதான் பெரும் வில்லன் நடிகராக இருந்தாலும் நடிகர் எம்.ஜி.ஆரிடம் நல்ல நட்பில் இருந்தவர் நடிகர் அசோகன்.

அசோகன் தமிழ் சினிமாவில் ஒரு திறமையான நடிகன் ஆவார். தமிழுக்கு முதன் முதலில் கதாநாயகனாக வேண்டும் என்கிற ஆசையில்தான் அசோகன் சினிமாவிற்கு வந்தார். அவரது முகத்தோற்றமும் கிட்டத்தட்ட கதாநாயகனுக்கான முகத்தோற்றமாகத்தான் இருந்தது.

இருந்தாலும் வில்லனாக நடிப்பதற்குதான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதால் தொடர்ந்து வில்லனாக நடிக்க தொடங்கினார். அதனை தொடர்ந்து அவருக்கு பேரும் புகழும் கிடைத்தன. தொடர்ந்து வில்லனாக நடிக்க தொடங்கினார்.

ஆனாலும் அவரது முகத்தில் நம்பியார் முகத்தில் இருக்கும் அளவிற்கு வில்லத்தனம் இருக்காது. ஆனாலும் எம்ஜிஆரின் நிறைய படங்களில் வில்லனாக இவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அசோகன் ஒரு முறை சரஸ்வதி என்னும் பிராமண பெண்ணை காதலித்து வந்தார் ஆனால் அந்த பெண்ணின் வீட்டில் அசோகனுக்கு பெண் தர மறுத்து விட்டனர்.

ஒரு நடிகனுக்கு பெண் தர முடியாது என்று உறுதியாக கூறிவிட்டனர். இந்த நிலையில் வேறு வழியில்லாமல் அந்த பெண்ணை அழைத்து வந்து சென்னையில் திருமணம் செய்தார் அசோகன்.

திருமணத்தின்போது ஒரு கிறிஸ்துவ ஆலயத்திற்கு அவரை அழைத்துச் சென்று அங்கு கதவுகளை மூடிவிட்டு எம்.ஜி.ஆர் மற்றும் சில நண்பர்களை மட்டும் வைத்துக் கொண்டு அசோகன் அந்த திருமணத்தை நடத்தினார் எம்.ஜி.ஆர் அவருக்கு சப்போர்ட்டாக அப்போது இருந்தார். சென்னையில் அசோகன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே எம்.ஜி.ஆர்தான் தயார்படுத்தி வைத்திருந்தார்.

திரையில் இருவரும் பகையாக இருந்தாலும் கூட நிஜ வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கின்றனர் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக உள்ளது.

To Top