இவ்வளவு பிரச்சனையில் இருக்கீங்களே.. உங்க பிரச்சனையை சரி செய்றேன்!.. வி.கே ராமசாமிக்காக இறங்கி வந்த எம்.ஜி.ஆர்!.
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களுக்கு பல உதவிகளை செய்து வந்தவர் எம்.ஜி.ஆர். அவர் அரசியலுக்கு சென்ற பிறகும் கூட திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு எக்கச்சக்கமான உதவிகளை செய்து வந்தார் சந்திரபாபு. அதிகப்பட்சம் யாராவது ஒரு திரைத்துறையினர் பிரச்சனையில் இருந்தார் அவர்களுக்கு முதலில் உதவுபவர் எம்.ஜி.ஆராகதான் இருப்பார்.
அவருக்கும் நடிகர் வி.கே ராமசாமிக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. வி.கே ராமராமி எம்.ஜி.ஆருடன் தனது அனுபவத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது நான் கடன் பிரச்சனையில் இருந்த சமயத்தில் ஒருமுறை எம்.ஜி.ஆர் என்னை வந்து சந்தித்தார்.

அண்ணே இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமா படம் நடிச்சி இருப்பீங்க. நிறைய படங்கள் தயாரிச்சும் இருக்கீங்க இருந்தாலும் நீங்க கடன் பிரச்சனையில் இருப்பதாக எனக்கு செய்திகள் வருதே அது உண்மையா என கேட்டார் எம்.ஜி.ஆர்.
ஆமாங்க என்றேன் நான். எப்படி உங்களுக்கு இவ்வளவு கடன் வந்துச்சு என எம்.ஜி.ஆர் கேட்டார். எல்லாம் நிர்வாக பிரச்சனைதான் நான் பாட்டுக்க படம் நடிக்க போயிடுறேன். காசு அப்படி இப்படி செல்வாயிடுச்சுங்க இப்ப கடன் பிரச்சனைல இருக்கேன் என நான் கூறினேன்
அப்ப ஒன்னு செய்யுங்க!.. என்ன வச்சி ஒரு படம் எடுத்து உங்க கடனை அடைச்சிட்டு நிம்மதியா இருங்கன்னு எம்.ஜி.ஆர் சொன்னார். எனக்கு ஆச்சரியமா போயிட்டு என்னடா இவரை வச்சி படம் எடுக்க தயாரிப்பாளர் எல்லாம் லைன்ல நிக்கிறாங்க. இவர் நமக்கு வாய்ப்பு கொடுக்கிறாரேன்னு இருந்துச்சு என கூறியுள்ளார். வி.கே ராமசாமி.