Cinema History
ரொம்ப கஷ்டமா இருக்கு!.. கண்ணை கசக்கி நின்ற பாரதிராஜாவுக்கு கை கொடுத்த எம்.ஜி.ஆர்!..
தமிழ் திரையுலகில் பலருக்கும் நன்மை செய்தவராக போற்றப்படுபவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் அப்போது பெரும் வெற்றியை கொடுத்து வந்தன.
இந்த நிலையில்தான் மக்களிடம் இருக்கும் அதிக செல்வாக்கை பயன்படுத்தி அரசியலுக்கு வந்தார் எம்.ஜி.ஆர். அரசியலில் எம்.ஜி.ஆருக்கு பெருமளவில் ஆதரவு இருந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார் எம்.ஜி.ஆர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஆன பிறகும் கூட தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை எம்.ஜி.ஆர் செய்து வந்தார். இதனால் எந்த ஒரு பிரபலமாக இருந்தாலும் அவர்களுக்கு உதவி ஏதாவது தேவைப்பட்டால் எம்.ஜி.ஆரைதான் சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே திரைப்படமே எம்.ஜி.ஆருக்கு பிடித்த படமாக இருந்தது. அதனை தொடர்ந்து பாரதிராஜாவுடன் தொடர்பில் இருந்து வந்தார் எம்.ஜி.ஆர்
இந்த நிலையில்தான் பாரதிராஜா இயக்கிய புதுமை பெண் திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளான பாரதிராஜா எம்.ஜி.ஆருக்கு போன் செய்தார். அவர் எம்.ஜி.ஆரிடம் சார் மனசுக்கு கஷ்டமா இருக்கு. உங்களை சந்திச்சா கொஞ்சம் ஆறுதலா இருக்கும் என கூறியுள்ளார்.
சரி என்று எம்.ஜி.ஆரும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். சந்திப்பில் விஷயத்தை அறிந்த எம்.ஜி.ஆர் அந்த படத்திற்கான திரையரங்குகளை அதிகரித்தார். அதற்கு பிறகு பார்த்தால் புதுமை பெண் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது.
இப்படி தோல்வியடைந்த படத்தை கூட வெற்றி படமாக மாற்றும் வித்தை தெரிந்தவராக இருந்துள்ளார் எம்.ஜி.ஆர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்