Cinema History
பொதுமக்களுக்கு பிரச்சனைனா சொந்த கட்சிக்காரன்னு கூட பார்க்க மாட்டேன்… கன்னத்துலயே ஒன்னு கொடுத்த எம்.ஜி.ஆர்…
MGR Take Action: தமிழ் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி பெரும் சாதனைகளை செய்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரண்டு துறைகளிலுமே தனக்கென தனி இடத்தை பதித்து அதில் வெற்றியும் பெற்றவர். திரைப்படங்களில் நடிக்கும்போதே மிகுந்த சமூக பொறுப்புடன் இருந்தார் எம்.ஜி.ஆர்.
மூட நம்பிக்கைகளை ஏற்படுத்தும் கதைகளில் எம்.ஜி.ஆர் நடிக்கமாட்டார். அதேபோல மது அருந்துவது, புகைப்பிடித்தல் போன்ற காட்சிகள் இடம் பெறும் படங்களிலும் நடிக்கமாட்டார். அரசியலுக்கு வந்த பிறகும் கூட மக்கள் மத்தியில் நேரடியான தொடர்பை ஏற்படுத்தி வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
இந்த நிலையில் முதலமைச்சராக ஆன பிறகு எம்.ஜி.ஆர் தினமும் தனது தோட்டத்தில் பொதுமக்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக ஒரு மூதாட்டி வந்திருந்தார்.
அவர் எம்.ஜி.ஆரிடம் கூறும்போது ஐயா உங்கள் கட்சி காரர் ஒருவர் வெகு நாட்களாக எனது வீட்டை கேட்டு தொந்தரவு செய்து வருகிறார் ஐயா, அது எங்கள் பூர்வீக சொத்து, எனக்கு அதை விற்பதில் விருப்பமில்லை என கூறியுள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை அழைத்து விசாரித்துள்ளார் எம்.ஜி.ஆர். அப்போது பேசிய அந்த கட்சிக்காரர்., ஐயா நான் அங்கு ஒரு திரையரங்கு கட்டலாம் என நினைக்கிறேன். அவர்கள் எவ்வளவு தொகை கேட்டாலும் அந்த இடத்திற்கு தருகிறேன் ஐயா என கூறியுள்ளார்.
இதை கேட்டதும் கடும் கோபமடைந்த எம்.ஜி.ஆர் அந்த நபரை ஓங்கி அறைந்துள்ளார். காசு இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு நினைச்சுயா… உன் இடத்தை இப்படி யாராவது கேட்டா கொடுப்பியா என திட்டியுள்ளார் எம்.ஜி.ஆர்
அதன் பிறகு அந்த மூதாட்டியை அழைத்து இனி உங்களை யாராவது தொல்லை செய்தால் என் மகன் எம்.ஜி.ராமசந்திரன் இருக்கிறான் என அவர்களிடம் கூறுங்கள் அம்மா என கூறியுள்ளார் எம்.ஜி.ஆர்.
