Connect with us

ராமராஜன் செய்த தவறு… துரத்திய ரவுடி படை – உதவிக்கு வந்து மாஸ் காட்டிய புரட்சி தலைவர்!…

Cinema History

ராமராஜன் செய்த தவறு… துரத்திய ரவுடி படை – உதவிக்கு வந்து மாஸ் காட்டிய புரட்சி தலைவர்!…

Social Media Bar

தமிழில் உள்ள பிரபலமான நடிகர்களில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு நடிகர் ராமராஜன். அப்போதைய காலகட்டத்தில் கிராமங்களில் இருந்து சினிமா கனவுகளோடு சென்னைக்கு வந்து பிறகு சினிமாவில் பெரும் கால்தளத்தை பதித்தவர்களாக பலர் உள்ளனர்.

இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து என நீளும் அந்த வரிசையில் நடிகர் ராமராஜனுக்கும் முக்கியமான இடம் உண்டு. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தவர் ராமராஜன். பிறகு இயக்குனர் ராமநாராயணன் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். ராமநாராயணன் இயக்கிய பல படங்களில் அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

இந்த சமயத்தில் அவர் நடிகராகவில்லை. ஆனால் அப்பொழுது நடிகை நளினி மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. ராமராஜனின் எதார்த்த குணம் நளினிக்கும் காதலை ஏற்படுத்தியது. ஆனால் இவர்கள் இருவரின் காதலை அவர்களது குடும்பம் ஒப்புக்கொள்ளவில்லை.

எனவே வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என வீட்டை விட்டு நளினியை இழுத்துக் கொண்டு ஓடி விட்டார் ராமராஜன். இந்த செய்தி நளினியின் குடும்பத்தாருக்கு தெரிந்து அவர்கள் ராமராஜனை தேடி ஆட்களை அனுப்பி உள்ளனர். ராமராஜன் திருமணம் செய்து கொண்டு வேக வேகமாக எம்ஜிஆரிடம் சென்று அடைக்கலம் புகுந்தார்.

விஷயத்தை அறிந்த எம்.ஜி.ஆர் ராமராஜனை அழைத்து, அந்த ஜோடிகளுக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில் அவர் பேசும்போது நான் இந்த ஜோடிகளுக்கு துணையாக இருக்கிறேன்.

என்னை தாண்டி வந்து யார் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கிறேன் என கூறிவிட்டார். அதற்குப் பிறகு ராமராஜன் நளினி ஜோடியை யாரும் வந்து தொட கூட இல்லை. நிஜ வாழ்விலும் கூட அப்படி ஒரு மாஸ் காட்டி உள்ளார் புரட்சித்தலைவர்.

To Top