Cinema History
சிவாஜி கூட எல்லாம் நீ நடிக்க கூடாது!.. ஜெயலலிதா நடித்த படத்தை நிறுத்திய எம்.ஜி.ஆர்… ஆனால் பின்னால் நடந்த விஷயமே வேற!..
MGR and Jayalalitha: எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவருக்குமான உறவு என்பது தமிழ் மக்கள் அனைவரும் அறிந்த விஷயமே. 10 ஆவது முடித்த உடனே சினிமாவிற்கு வந்து நடிகையானார் ஜெயலலிதா. அப்போது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முதன் முதலாக எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்தார் ஜெயலலிதா.
அப்போதே எம்.ஜி.ஆருக்கும் இவருக்குமிடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து வந்தனர். ஆனால் அதற்கு பிறகு ஜெயலலிதா மற்ற நடிகர்கள் படத்தில் நடிப்பது எம்.ஜி.ஆருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிவாஜி கணேசனுடன் குறைவான படங்களே நடித்தார் ஜெயலலிதா. இதற்கு எம்.ஜி.ஆர்தான் காரணம் என்று ஒரு பேச்சு உண்டு. இந்த நிலையில் ஸ்ரீதர் இயக்கத்தில் காலமெல்லாம் காத்திருப்பேன் என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
ஆனால் இரண்டே நாட்களில் அந்த படத்தின் படப்பிடிப்பு நின்றது. சிவாஜி ஜெயலலிதாவுடன் சேர்ந்து நடத்ததால் எம்.ஜி.ஆர்தான் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் அதன் உண்மை கதை வேறு விதமாக இருந்தது.
கோவை செழியன் என்னும் தயாரிப்பாளர் தயாரிப்பில்தான் காலமெல்லாம் காத்திருப்பேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் இரண்டே நாட்களில் அவருக்கு அந்த படம் பிடிக்காமல் போய்விட்டது. ஸ்ரீதர் படங்களில் இருக்கும் தனித்துவம் எதுவும் இதில் இல்லை என அவர் கருதினார்.
பிறகு ஸ்ரீதர் வேறு ஒரு கதையை எழுதி வந்து அந்த கதை ஊட்டி வரை உறவு என்கிற பெயரில் வெளியானது. இதற்கும் எம்.ஜி.ஆருக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்