Cinema History
அந்த படத்துக்குதான் எம்.ஜி.ஆருக்கு அதிக சம்பளம் கொடுத்தோம்!.. அப்போதே அவ்வளவு சம்பளமா?
தமிழ் சினிமா துறையில் கமர்சியல் கதாநாயகனாக விஜய் ரஜினிகாந்த்திற்கு முன்னோடியாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பொதுவாக கமர்சியல் கதாநாயகர்கள் என்றால் நாட்டில் நடக்கும் தீமைகளுக்கு எதிராகவும் மக்களுக்கு நன்மை செய்பவர்களாகவும் இருப்பதை இப்போது வரை சினிமாவில் பார்க்க முடியும்.
அதை அப்பொழுதே ஆரம்பித்து வைத்தவர்தான் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்ததற்கு காரணம் அவர் தீமைக்கு எதிராக போராடும் தன்மைதான் என்றுதான் என்று கூற வேண்டும். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமான பிறகு அவரை வைத்து இயக்கிய திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் அன்பே வா.

பொதுவாக எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஒன்றை வைத்து சண்டை காட்சிகளுடன் படங்கள் செல்லும். ஆனால் ஒரு ஜாலியான திரைப்படமாக எடுக்கப்பட்ட திரைப்படம்தான் அன்பே வா. அன்பே வா திரைப்படத்தில் வில்லன் என்று யாருமே கிடையாது. படத்தில் வரும் அசோகன் கூட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்க மாட்டார்.
மிகவும் ஜாலியான இந்த திரைப்படம் அப்போதே மக்கள் மத்தியில் வெகுவான வரவேற்பை பெற்றது இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆருக்கு அதிகமான சம்பளம் கொடுத்ததாக ஏ.வி.எம் சரவணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அந்த படத்திற்குதான் முதன்முதலாக எம்.ஜி.ஆருக்கு மூன்றரை லட்சம் சம்பளம் கொடுத்தோம் என்று அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதற்கு முன்பு வரை எம்.ஜி.ஆர் அந்த அளவிற்கான சம்பளத்தை வாங்கவில்லை.
