லியோ படத்தை அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் 68வது படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்குகிறார். லியோ படமே இன்னும் வெளியாக நிலையில் தளபதி 68 படத்திற்கான ஷூட்டிங் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ் சினிமாவில் 80, 90களில் பிரபலமான நடிகராக இருந்த மைக் மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
’அவர் எப்படிப்பா வில்லன் கெட்டப்புக்கு செட் ஆவார்?’ என ஆரம்பம் முதலே பலருக்கும் சந்தேகம் இருந்து வருகிறதாம். விஜய்க்குமே இந்த யோசனை இருந்த நிலையில் படத்தில் மைக் மோகனின் கெட்டப்பை பார்த்ததும் விஜய்க்கு இவர் வில்லனுக்கு சரியான ஆள் என நம்பிக்கை வந்து விட்டதாம்.
விஜய்க்கு நிகராக மைக் மோகனையும் வில்லன் கேரக்டரில் செட் செய்யும் அளவிற்கு காட்சிகளை எழுதி உள்ளாராம் வெங்கட் பிரபு. சமீபத்தில் மைக் மோகன் – விஜய் இடையேயான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டதாம். அந்த காட்சிகளை கண்டு சிறப்பான சண்டை காட்சியாக வந்திருக்கிறது என படக்குழுவுக்கு பரம திருப்தியாம். இந்த தகவல் வெளியே கசிய மைக் மோகனின் வில்லன் கெட்டப் குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.






