Connect with us

நிஜத்தில் ஊழல் பக்கம் நிற்பார்!.. கமலை வச்சி செய்த இயக்குனர் மோகன் ஜி!..

kamalhaasan mohan g

News

நிஜத்தில் ஊழல் பக்கம் நிற்பார்!.. கமலை வச்சி செய்த இயக்குனர் மோகன் ஜி!..

Social Media Bar

பிரபலமான சினிமா நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். வெகு நாட்களாகவே கட்சி ஒன்று துவங்கி அரசியல் சேவை செய்ய வேண்டும் என்பது கமல்ஹாசனின் ஆசையாக இருந்தது. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை துவங்கினார் கமல்ஹாசன்.

இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 142 தொகுதிகளில் கமல்ஹாசனின் கட்சியானது போட்டியிட்டது. அதில் பெரிதாக அவர் வெற்றிபெறவில்லை என்றாலும் கூட தொடர்ந்து கட்சி சார்ந்த விஷயங்களை செய்து வந்தார்.

இதற்கு நடுவே திரைத்துறையிலும் அவரது பங்கை ஆற்றி வருகிறார். கட்சி துவங்கிய சமயத்தில் கமல்ஹாசன் எந்த கட்சியுடனும் கூட்டணி மட்டும் வைக்க மாட்டேன். தனித்துதான் போட்டியிடுவேன் என கூறியிருந்தார். ஆனால் தற்சமயம் தனது வாக்கில் இருந்து பின் வாங்கியுள்ளார் கமல்ஹாசன்.

kamalhaasan
kamalhaasan

ஆம் நாடாளுமன்ற தேர்தலில் தற்சமயம் திமுக கட்சிக்கு ஆதரவை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போவதாக அவர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து பலரும் கமல்ஹாசனை விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மோகன் ஜி கமலை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். திரைப்படங்களில் ஊழலை, லஞ்சத்தை ஒழிக்க வித விதமாக அவதாரம் எடுப்பார்.. ஆனால் நிஜத்தில் ஊழல் செய்பவர்கள் பக்கம் நின்று ஓட்டு கேட்பார். அஞ்சி யஞ்சிச் சாவார். இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே.. என பதிவிட்டுள்ளார்.

தமிழில் ருத்ர தாண்டவம், த்ரௌபதி மாதிரியான திரைப்படங்களை இயக்கியுள்ளார் இயக்குனர் மோகன் ஜி.

To Top