உன் படம் தியேட்டருக்கு வந்தா கொழுத்திருவேன் பாத்துக்க!.. நடிகருக்கு எச்சரிக்கை கொடுத்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!..

MGR: சிவாஜி எம்.ஜி.ஆர் காலகட்டங்களில் நாடகங்களில் நடித்து வந்தவர்களுக்குதான் வெகுவாக சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கொடுத்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு வரும் தலைமுறையினர் நடிப்பை எப்படி கற்றுக் கொடுப்பது என யோசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் வெளிநாடுகளில் இதற்காக ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் என்கிற அமைப்பு இருப்பதாகவும் அதன் மூலம் நடிப்பு கற்று தரப்படுவதாகவும் தெரிந்து கொண்டார்கள்.

இதனை தொடர்ந்து இந்தியாவில் புனேவில் முதன்முதலாக துவங்கப்பட்ட இன்ஸ்ட்யூட்டில் படித்து நடிகர் மோகன் சர்மா அங்கு சென்று நடிப்பதற்கான பயிற்சியை பெற்று தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தார். அப்படி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்துவிட்டு வந்தார் என்பதற்காகவே அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

mohan sharma
mohan sharma
Social Media Bar

இந்த நிலையில் இயக்குனர் மணியன் இயக்கத்தில் மோகன் சர்மா ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இளமை காலங்களில் அவரும் மிகவும் அழகாக இருந்ததால் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன என்று பேச்சுக்கள் இருந்தன.

இந்த நிலையில் ஒருநாள் எம்.ஜி.ஆர் அவரை சந்திக்க வந்தார். அப்பொழுது எம்.ஜி.ஆரிடம் வணக்கம் சொல்லிவிட்டு கை கொடுத்தார் மோகன் சர்மா பொதுவாக எம்.ஜி.ஆரை முதல் முறை சந்திக்கும் போது எந்த நபராக இருந்தாலும் அவரது காலில் விழுவது தான் வழக்கம்.

காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பழக்கம் இல்லை என்பதால் மோகன் ஷர்மா கை கொடுத்தார் இந்த நிலையில் இது குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுதும்போது அடுத்த எம்ஜிஆராக சினிமாவிற்கு மோகன் சர்மா வந்திருக்கிறார் என்று எழுதி விட்டார்.

ஏனெனில் மோகன் சர்மாவும் எம்.ஜி.ஆரை போலவே பார்ப்பதற்கு வெள்ளையாக அழகாக இருப்பார். இந்த நிலையில் இது அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவர அடுத்த சில நாட்களில் மோகன் சர்மாவிற்கு ஒரு போன் வந்தது.

அவர்கள் எம் ஜி ஆரின் ரசிகர் மன்றத்தில் இருந்து பேசுகிறோம் என்று பேசினார்கள். அவர்கள் கூறும் பொழுது உன்னுடைய திரைப்படம் எந்த திரையரங்கில் வெளியானாலும் அந்த திரையரங்கையே கொளுத்தி விடுவோம் என்று எச்சரிக்கை கொடுத்தனர்.

இதனை அடுத்து படத்தின் இயக்குனரும் பின்வாங்கவே கடைசியில் அந்த படத்தில் இருந்து மோகன் ஷர்மா நீக்கப்பட்டார். இந்த விஷயத்தை அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.