நயன்தாராவை நம்பி தயாரிப்பாளர் செஞ்ச அந்த காரியம்… அவசரப்பட்டியே குமாரு.!

சமீப காலமாகவே நயன்தாரா நடிக்கும் எந்த ஒரு திரைப்படமும் பெரிதாக வெற்றி பெறுவது கிடையாது. இருந்தாலும் கூட சினிமாவில் நயன்தாராவிற்கு இருக்கும் மார்க்கெட் என்பது இன்னமும் குறையாமல் இருந்து வருகிறது.

அந்த வகையில் அடுத்து நயன்தாரா மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். மூக்குத்தி அம்மனின் முதல் பாகம் நல்ல வெற்றியை கொடுத்ததை அடுத்து இந்த முடிவை எடுத்திருக்கிறார் நயன்தாரா.

இயக்குனர் சுந்தர் சி:

இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க இருக்கிறார். மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஆனால் இது குறித்து ரசிகர்களிடம் மாற்று கருத்து இருக்கிறது.

மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகத்தைப் பொறுத்தவரை நயன்தாராவை காட்டிலும் ஆர்.ஜே பாலாஜிக்காகவே அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

mookuthi amman
mookuthi amman
Social Media Bar

ஆர்.ஜே பாலாஜியின் நகைச்சுவை அந்த படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது. ஆனால் நயன்தாரா இப்பொழுது ஆர்.ஜே பாலாஜியை தவிர்த்து விட்டு தனியாக மூக்குத்தி அம்மன் பாகம் இரண்டில் நடிக்கிறார்.

ஆர்.ஜே பாலாஜி இல்லை:

எனவே இந்த படம் அதே அளவிற்கான வரவேற்பை பெறுமா? என்பது சந்தேகம்தான் அதே சமயம் ஆர்.ஜே பாலாஜி மாசாணி என்கிற இன்னொரு திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

அந்த திரைப்படத்தில் திரிஷா அம்மனாக நடிக்கிறார். எனவே இந்த படம் தான் கண்டிப்பாக வரவேற்பு பெரும் என்பது ஒரு பக்கம் பேச்சாக இருந்து வருகிறது. இதற்கு நடுவே ஏற்கனவே நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படமே பெரும் தோல்வியை கொடுத்த நிலையில் இந்த படத்தை 55 கோடிக்கு தயாரிக்க இருக்கிறது வேல்ஸ் நிறுவனம்.

எப்படி தைரியமாக இப்படி ஒரு முடிவை இந்த நிறுவனம் எடுத்தது என்று கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.