Cinema History
எம்.ஆர் ராதாவை பழிவாங்க இயக்குனர் போட்ட ப்ளான்!.. ஒன்றரை வருடம் மருத்துவமனையில் கிடந்த எம்.ஆர் ராதா!.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க!..
MR Radha : தமிழ் சினிமாவில் விரோதம் காரணமாக பல விஷயங்கள் நடப்பதுண்டு சில நேரங்களில் அப்படி நடக்கும் விஷயங்கள் உயிருக்கே ஆபத்தாக கூட முடிவதுண்டு. உதாரணமாக ஒருமுறை ஒரு இயக்குனர் பொன்னம்பலத்தை இப்படியாக பலி வாங்கியதாக பொன்னம்பலம் ஒருமுறை பேட்டியில் கூறியிருந்தார்.
அதனால் சில காலங்கள் பொன்னம்பலம் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம் அதே மாதிரியான ஒரு நிலை நடிகர் எம் ஆர் ராதாவுக்கு நடந்திருக்கிறது தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நாடகத் துறையில் பிரபலமாக இருந்து வந்தவர் எம்.ஆர் ராதா.
இதனாலேயே சினி துறைக்கு அவர் வந்த பொழுது அவர் மீது அனைவருக்கும் அதிகமான மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஆனாலும் சில இயக்குனர்களுக்கு அவர் மீது பொறாமையும் இருந்து வந்தது. அப்படியாக பிரகாஷ் என்ற ஒரு இயக்குனருக்கு எம்.ஆர் ராதா மீது மிகுந்த கோபம் இருந்து வந்தது.

அவர் இயக்கிய ஒரு படத்தில் எம்.ஆர் ராதா நடிக்கும் பொழுது அந்த படம் துவங்கிய நாள் முதலே எம்.ஆர் ராதா மீது கோபத்தில் இருந்தார் பிரகாஷ். இதனால் எம்.ஆர் ராதாவை ஏதாவது செய்ய வேண்டும் என்று இருந்தபோது ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டது.
அதில் மூன்றாவது மாடியில் இருந்து குதிரை வண்டிக்கு எம்.ஆர் ராதா குதிப்பது போன்ற காட்சி ஒன்று இருந்தது. அதை உங்களால் செய்ய முடியுமா என்று எம்.ஆர் ராதாவிடம் சவால் விடும் விதமாக கேட்டு இருக்கிறார் இயக்குனர்.
இருந்தாலும் பயப்படாத எம்.ஆர் ராதா அந்த காட்சிக்கு நிஜமாகவே மூன்றாவது மாடியில் இருந்து குதித்து இருக்கிறார். மிக கச்சிதமாக அங்கிருந்த குதிரை வண்டியில் எம்.ஆர் ராதா குதித்ததும் இயக்குனருக்கே அது ஆச்சரியமாக அமைந்துள்ளது.

இருந்தாலும் அந்த காட்சி சரியாக அமையவில்லை என்று பொய் சொல்லி மீண்டும் அந்த காட்சியை நடிக்க செய்திருக்கிறார் இயக்குனர். அதேபோல மீண்டும் எம்.ஆர் ராதா குதிக்கும் பொழுது அந்த குதிரை வண்டி சற்று நகர்ந்ததால் கீழே விழுந்து அவருக்கு அடிபட்டது.
அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் மருத்துவமனையில் இருந்தார் எம்.ஆர் ராதா இதை பின்பு ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதற்கு பிறகு எந்த இயக்குனர் சொன்னாலும் அந்த காட்சி எனக்கு நடிக்க தோன்றினால் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்தேன் இதனால் பலர் என்னை தவறாக விமர்சித்தாலும் அதை பற்றி நான் கவலைப்படவில்லை என்று எம்.ஆர். ராதா கூறி இருக்கிறார்.
