Cinema History
அரசாங்கமே தேடி வந்த நபருக்கு அடைக்கலம் கொடுத்த எம்.ஆர் ராதா!.. இதெல்லாம் வேற பண்ணுனாரா!..
MR radha : தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தவர் நடிகர் எம்.ஆர் ராதா. சினிமாவிற்கு வருவதற்கு முன்பே இவர் நாடக கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். அதன் மூலமாக உலகம் முழுக்க பல நாடுகளுக்கு சென்று தமிழ் மக்களுக்காக நாடகங்களை போட்டு வந்தார்.
இதனால் மிகவும் பிரபலமாக இருந்தார் எம்.ஆர் ராதா அதற்கு பிறகுதான் அவர் சினிமாவிற்கு வந்தார் என்பதால் நாடக அனுபவத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனுக்கு எல்லாம் மூத்தவர் எம்.ஆர் ராதா அதனால் எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் கூட அவரை அண்ணா என்று தான் அழைப்பார்கள்.
அதேபோல அரசியல் ரீதியாக மிகுந்த ஈடுபாடு கொண்டவராக எம்.ஆர் ராதா இருந்தார். பெரியாரின் கொள்கைகள் மீது தீவிரமான ஈடுபாட்டுடன் அவர் இருந்தார். அதேபோல கம்யூனிச ஆதரவாளராகவும் அவர் இருந்தார். பிரகாசம் என்பவர் முதலமைச்சராக இருந்த பொழுது அவர் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக இருந்தார்.
இதனால் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மீது துப்பாக்கி சூடு என்பது அடிக்கடி நடந்தது இதனை கண்டித்து பெரியார் மற்றும் எம்.ஆர் ராதா நிறைய மேடைகளில் பேசினர். இந்த நிலையில் அரசாங்கம் தேடிக் கொண்டிருந்த ஜீவா என்கிற ஒரு நபர் எம்.ஆர் ராதாவிடம் அடைக்கலம் தேடி வந்தார்.
எம்.ஆர் ராதா அப்போதைய ஆட்சிக்கு எதிராக இருந்ததால் அந்த நபருக்கு அடைக்கலம் கொடுத்தார். அவருக்கு மொட்டை அடித்து தலையில் சந்தனம் பூசி, விபூதி பூசி ஆள் அடையாளம் தெரியாமல் மாற்றியதோடு அல்லாமல் தனக்குத் தெரிந்த உறவினர் என்று திரை துறையிலும் கூறி வந்தார். அப்போது எம்.ஆர் ராதாவுக்கு நெருக்கமான சிலர் இது தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அறிவுரை வழங்கியபோதும் ஜீவாவை காப்பாற்றுவதற்காக அந்த ரிஸ்கை எடுத்தார் எம்.ஆர் ராதா.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்