தனுஷ்க்கும் அந்த நடிகைக்கும் திருமணம்.. குடும்ப சந்திப்பு நடந்தது உண்மையா?

சமீபத்தில் தான் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிர்னாள் தாக்கூர் குறித்த செய்திகள் அதிகமாக பரவி வருகின்றன. நடிகர் தனுஷ் சமீபத்தில் ஒரு விழாவிற்கு சென்ற பொழுது அங்கே மிர்னாள் தாக்கூர் ஓடி வந்து அவரை வரவேற்றார்.

மேலும் மிர்னாள் தாக்கூரும் அவரும் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டனர். அதேபோல இன்ஸ்டாகிராம் மாதிரியான சமூக வலைதள பக்கங்களிலும் மிர்னாள் தாக்கூர் தனுஷ் மற்றும் தனுஷ் குடும்பத்தை சேர்ந்தவர்களை பின்பற்றி வருகிறார்.

Social Media Bar

எனவே தனுஷும் மிர்னாள் தாக்கூரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்களா? என்கிற கேள்வி வெளிப்படையாக ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

ஏற்கனவே மிர்னாள் தாக்கூரின் குடும்பத்தாரும் தனுஷின் குடும்பத்தாரும் சந்தித்து பேசி பேசி கொண்டதாக கூட தகவல்கள் இருந்து வருகின்றன. அதனால் தான் அவர்கள் ஒன்றாக சந்தித்துக் கொண்டதும் பேசிக் கொண்டனர் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.