Connect with us

உடனே பாட்டு வேணும்? – ஒரே நாளில் தயாரித்து தந்த எம்.எஸ்.வி! எந்த பாடல் தெரியுமா?

Cinema History

உடனே பாட்டு வேணும்? – ஒரே நாளில் தயாரித்து தந்த எம்.எஸ்.வி! எந்த பாடல் தெரியுமா?

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்கும் இசையமைப்பாளர்கள் பாடல் அமைத்து கொடுத்த பிறகுதான் அந்த பாடலை வீடியோவாக எடுப்பதற்கான திட்டங்கள் நடக்கும்.

எனவே எந்த ஒரு பாடலையும் தயாரிக்க வேண்டும் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பாவது அந்த பாடலை தயாரிக்குமாறு இசையமைப்பாளரிடம் கூற வேண்டும். பிறகு அதற்கு பாடலாசிரியர் வரிகள் எழுத வேண்டும்.

எழுதிய வரியை பாடகர் பாட வேண்டும். ஆனால் முந்தைய சினிமாக்களில் இயக்குனர் பேச்சுக்கு மறு வார்த்தை கிடையாது என்கிற நிலை இருந்தது. இயக்குனர் கேட்டால் உடனே இசையமைப்பாளர்கள் பாடலை தயார் செய்து தந்துவிடுவார்கள்.

1965 ஆம் ஆண்டு பா.நீலகண்டன் என்கிற இயக்குனர் இயக்கி எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்து வெளிவந்த படம் ஆனந்தி. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு சமயம் குற்றாலத்தில் நடந்து கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் குற்றாலம் இயக்குனருக்கு பிடித்து போகவே இங்கே ஒரு பாடல் காட்சியை படமாக்கினால் என்ன? என்று யோசித்துள்ளார். உடனே எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு போன் செய்து பாடல் குறித்த விவரங்களை கூறியுள்ளார். அதற்கு உடனடியாக இசையமைத்த எம்.எஸ்.வி, அடுத்து கண்ணதாசனை அழைத்து இசையை கூறியுள்ளார். கண்ணதாசனும் உடனே அதற்கு பாடல் வரிகளை எழுதி தந்தார்.

அடுத்த நாள் மதியத்திற்குள் பாடல் தயாராகி இயக்குனரின் கைகளுக்கு சென்றது. எனவே முந்தைய சினிமாக்களில் எப்படி குறைவான நாட்களில் படங்களை தயாரித்து முடித்தனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

குளிரடிக்குது என்கிற அந்த பாடலை கேட்க இங்கே கிளிக் செய்யவும்

POPULAR POSTS

rajinikanth dil raj
pa ranjith mohan g
aishwarya rajeshaishwarya rajesh
yuvan shankar raja
sangeetha
To Top