Connect with us

சீக்கிரம் பாட்டு வேணும் – ட்ராபிக் சிக்னலில் அமர்ந்து பாட்டு போட்ட எம்.எஸ்.வி

MSV

Cinema History

சீக்கிரம் பாட்டு வேணும் – ட்ராபிக் சிக்னலில் அமர்ந்து பாட்டு போட்ட எம்.எஸ்.வி

Social Media Bar

தமிழ் இசையமைப்பாளர்களை பொருத்தவரை படங்களுக்கு இசையமைப்பதற்காக அவர்கள் சிறிது காலங்கள் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் படத்திற்கான முழு இசை மற்றும் பாடல்களுக்கான இசை ஆகியவற்றை உருவாக்கி தருவார்கள்.

ஆனால் பழைய சினிமா காலகட்டத்தில் இப்படி கிடையாது ஒரு படத்திற்கான பாடல்கள் அனைத்தும் ஒரே நாளில் இசையமைக்கப்படும் உதாரணமாக ராஜ்கிரண் இயக்கி நடித்த அரண்மனைக்கிளி திரைப்படத்தின் பாடல்களை இளையராஜா இரண்டு மணி நேரத்தில் போட்டு கொடுத்தாராம், அப்படியாக எம்.எஸ்.விக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

நெஞ்சில் ஓர் ஆலயம் என்கிற திரைப்படத்திற்கு இசையமைப்பதற்காக எம் எஸ் வி காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு பின்னாலேயே கலைஞர் கருணாநிதி மற்றும் இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோரின் காரும் சென்று கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் டிராபிக் ஆனதால் மூன்று கார்களும் நடு நடுரோட்டில் நின்றன. அந்த சமயத்தில் நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்திற்கு இசையமைக்க வேண்டி இருந்ததால் ஸ்ரீதரின் காரில் சென்று கருணாநிதியும் எம் எஸ் வியும் அமர்ந்தனர். முத்தான முத்தல்லவா என்கிற பாடலுக்கான இசையை அங்கே அமைத்தார் எம்.எஸ்.வி. அந்த அளவிற்கு அப்பொழுது சினிமாவில் வேகமாக வேலைகள் நடந்தன.

To Top