அந்த விஷயத்துல சந்தானத்தை பார்த்தா வியப்பா இருக்கு!.. தமிழ் சினிமாவில் யாருமே செஞ்சது இல்ல!.. ஓப்பனாக கூறிய முனிஸ்காந்த்!.

Actor santhanam: விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த பலரும் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றனர். அப்படி தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று வந்தவர் தான் நடிகர் சந்தானம். நடிகர் சந்தானம் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் ஜீவா சிம்பு மாதிரியான நடிகர்கள் அவரது நடிப்பிற்கு ரசிகர்களாக இருந்தனர்.

இதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பை பெற்ற சந்தானம் கொஞ்ச நாட்களில் காமெடியனாக நடித்து வந்தார். பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கினார் தற்சமயம் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார் சந்தானம்.

இந்த நிலையில் அவர் திரும்ப காமெடி காமெடியனாக நடிப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இந்நிலையில் முனிஷ்காந்த் ஒரு பேட்டியில் கூறும்போது பொதுவாக ஒரு நடிகர் காமெடியனாக அறிமுகமாகிவிட்டால் அவரால் கதாநாயகன் ஆகவே முடியாது.

Comedian Actor Santhanam at the Vallavanukku Pullum Aayudham Thanks giving-Success Meet
Social Media Bar

நாகேஸில் துவங்கி கவுண்டமணி செந்தில் வடிவேலு வரையிலும் அனைவரும் காமெடியனாக சினிமாவிற்கு வந்தனர். அவர்கள் சில படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் கூட அதிலும் காமெடி கதாநாயகர்களாக இருந்தார்களே தவிர ஒரு சீரியஸான கதாநாயகனாக அவர்களால் நடிக்க முடியவில்லை என்று கூறினார் முனிஸ்காந்த்.

மேலும் கூறும்பொழுது சந்தானம் மட்டுமே தன்னை ஒரு கமர்சியல் கதாநாயகனாக மாற்றி உள்ளார். தமிழ் சினிமாவில் வேறு எந்த காமெடி நடிகரும் காமெடியனாக வந்து இப்படி ஒரு ஹீரோவாக மாறவில்லை அந்த விஷயத்தில் சந்தானத்தை பார்த்தால் இப்போதும் கூட எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது என்று கூறுகிறார் முனிஷ்காந்த்.