Cinema History
40 வயசோட சினிமாவை விட்டே போக இருந்தேன்!.. ரஜினிகாந்த் தான் எல்லாத்துக்கும் காரணம்!.. ஏ.ஆர் ரகுமானின் ஓப்பன் டாக்!.
AR Rahman and Rajinikanth : தமிழ் சினிமாவில் இசை புயல் என்றெல்லாம் பெருமையுடன் அழைக்கப்படுபவர் ஏ.ஆர் ரகுமான். இந்த இசை புயல் என்கிற பட்டத்திற்கு பின்னால் ஒரு கதை உண்டு. இளையராஜாவிற்கு முன்பும் சரி இளையராஜாவிற்கு பிறகும் சரி புதுவிதமான இசையை சினிமாவிற்குள் பெரிதாக யாரும் அறிமுகப்படுத்தவில்லை.
இளையராஜாவாக இருக்கட்டும் மற்ற இசையமைப்பாளர்களாக இருக்கட்டும் அவர்களது இசையும் பாடலும் ஏற்கனவே கேட்ட இசையை போல தான் இருக்கும். அதில் இளம் தலைமுறையினருக்கு பிடித்தாற் போல புதிதாக இசையை புகுத்தியவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்தான் ஏ ஆர் ரகுமான் சினிமாவிற்கு வந்த போது தன்னுடைய முதல் திரைப்படம் ஆன ரோஜா திரைப்படத்திலேயே ஆங்கில இசை கலந்த ஒரு இசையை போட்டு இருப்பார்.

ஏ.ஆர் ரகுமான் எடுத்த முடிவு:
மிகவும் சிறுவயதிலேயே ஏ.ஆர் ரகுமான் திரைப்படங்களுக்கு இசையமைக்க துவங்கிவிட்டார். அவர் ஒரு பேட்டியில் பேசும்பொழுது 11 வயதிலேயே நான் இசையமைக்க தொடங்கி விட்டேன் 17 வயதிற்கலாம் திரைப்படங்களுக்கு இசையமைக்க தொடங்கிவிட்டேன். எனவே என்னுடைய நாற்பதாவது வயதில் சினிமாவை விட்டு விலகிவிட வேண்டும் என்று இருந்தேன்.
ஏனெனில் ஒரு கட்டத்திற்கு மேல் இசையமைப்பது என்பது சோர்வை தரும் ஒரு வேலையாக மாறி இருந்தது. போதும் இதோடு சினிமாவை விட்டு விலகிவிடலாம் என்று முடிவு எடுத்திருந்தேன். அப்பொழுதுதான் எந்திரன் திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது எந்திரன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அத்தனை வயது ஆனபோதும் கூட கஷ்டப்பட்டு அந்த திரைப்படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தார் அவரை பார்த்த பிறகுதான் எனக்கு ஒன்று புரிந்தது. எத்தனை வயதானாலும் மன உறுதி இருந்தால் தொடர்ந்து வேலை செய்ய முடியும் என்று அப்போதே அந்த 40 வயதோடு ஓய்வெடுக்க வேண்டும் என்ற ஆசையை கைவிட்டேன். இப்போது வரை இசையமைத்துக் கொண்டிருக்கிறேன் அதற்கு முக்கிய காரணம் ரஜினிகாந்த் என்று கூறியிருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.
