Connect with us

எங்கிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டுதான் இளையராஜா அதை செய்தார்!.. பாக்கியராஜ் செய்த தவறால் சிக்கிய பார்த்திபன்!.

parthiban and ilayaraja

Cinema History

எங்கிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டுதான் இளையராஜா அதை செய்தார்!.. பாக்கியராஜ் செய்த தவறால் சிக்கிய பார்த்திபன்!.

Social Media Bar

Parthiban and Ilayaraja: தமிழ் சினிமா நடிகர்களில் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக இருந்து அவரை போலவே பிறகு நடிகராகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் பார்த்திபன். இப்போதும் கூட படம் இயக்குவது நடிப்பது ஆகிய வேலைகளை செய்து வருகிறார் பார்த்திபன்.

ஆரம்ப காலக்கட்டங்களில் இப்படி பலருக்கும் சினிமாவில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் பாக்கியராஜ். அவரால் பலர் சினிமாவில் இயக்குனரானார்கள். இதனாலேயே பாக்கியராஜின் அலுவலகம் முன்பு உதவி இயக்குனருக்கு வாய்ப்பு கேட்டு ஒரு கும்பல் எப்போதும் நின்று கொண்டிருக்குமாம்.

அந்த அளவிற்கு பாக்கியராஜிடம் வாய்ப்பு வாங்க அப்போது இளைஞர்கள் போட்டி போட்டு வந்துள்ளனர். ஆனால் பாக்கியராஜாலேயே பார்த்திபன் சிக்கலில் சிக்கிய சம்பவமும் நடந்துள்ளது. பார்த்திபன் தனது முதல் திரைப்படத்தை இயக்கும்போது அதற்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

parthiban
parthiban

அப்போது குறுக்கிட்ட பாக்கியராஜ் நானே உனது திரைப்படத்திற்கு இசையமைக்கிறேன் என கூறியப்போது இல்லை எனது முதல் படத்திற்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என பிடிவாதமாக கூறினார் பார்த்திபன்.

நீ இளையராஜாவிடம் சென்று வாய்ப்பு கேள். முதலில் அவர் ஒப்புக்கொள்வாரா என பார் என கூறியுள்ளார் பாக்கியராஜ். அதே போலவே இளையராஜாவிடம் சென்றப்போது அவர் பார்த்திபன் படத்திற்கு இசையமைக்க மறுத்துவிட்டார். எதனால் இளையராஜா ஒப்புக்கொள்ளவில்லை என பார்க்கும்போது பாக்கியராஜ் சில காலங்களுக்கு பிறகு அவரது திரைப்படங்களுக்கு அவரே இசையமைக்க துவங்கிவிட்டார்.

இதனால் கோபமான இளையராஜா இனி பாக்கியராஜ் தொடர்பான யாருக்குமே இசையமைத்து கொடுக்க கூடாது என முடிவெடுத்துவிட்டார். இதனை அடுத்து நான் என் வாழ்க்கையில் என்றுமே இசையமைக்க மாட்டேன் என பார்த்திபன் உறுதிமொழி கொடுத்த பிறகே பார்த்திபனின் புதிய பார்வை படத்திற்கு இசையமைத்து கொடுத்துள்ளார் இளையராஜா.

To Top