சினிமாவில் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக இயக்குனர் ஆனவர்கள் அந்த காலம் முதலே இருந்து வருகின்றனர். அப்படியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் தொடர்ந்து குறும்படங்கள் இயக்கி வந்த கார்த்திக் சுப்புராஜ் அதன் மூலமாக சினிமாவில் வாய்ப்பை பெற்றார்.
அவர் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் பீட்சா. அந்த திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. ஆனால் பீட்சா படத்திற்கு இசையமைப்பது குறித்து அவரிடம் பேசுவதற்கான சென்றப்போது நடந்த கூத்தை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
பொதுவாக யாராவது இயக்குனரை வாய்ப்புக்காக சந்திப்பதாக இருந்தால் சாலையில் வைத்து சந்திப்பதுதான் சந்தோஷ் நாராயணின் வழக்கம். ஆனால் கார்த்திக் சுப்புராஜை ஒரு ஹோட்டலுக்கு வர சொல்லி அங்கு சந்தித்தார்.
முதன் முதலில் அவரை சந்திக்கும்போது யார் கார்த்திக் சுப்புராஜ் என்றே தெரியவில்லை. அதனால் வருபவர்களை எல்லாம் ஒரு வேளை அவர் கார்த்திக் சுப்புராஜாக இருப்பாரோ, இல்லை இவராக இருக்குமோ என வருபவர்களை எல்லாம் சொல்லி கொண்டிருந்தாராம் சந்தோஷ் நாராயணன்.
முதல் சந்திப்பு:
அப்போது கார்த்திக் சுப்புராஜே ஹோட்டலுக்குள் வந்துள்ளார். கண்டிப்பாக இவனாக இருக்காதுடா என அருகில் இருந்தவரிடம் கூறியுள்ளார் சந்தோஷ் நாராயணன். ஆனால் நேராக சந்தோஷ் நாராயணனை நோக்கி வந்த கார்த்திக் சுப்புராஜ் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு படக்கதையை கொடுத்துள்ளார்.
அதில் மூன்று பேப்பர்களுக்குதான் கதையே இருந்துள்ளது. அதனை பார்த்த சந்தோஷ் நாராயணன் இது சரிப்பட்டு வராது என யோசித்தார். எனவே வேறு இசையமைப்பாளரை பார்க்கும்படி கூறியுள்ளார். ஆனால் கார்த்திக் சுப்புராஜ் அதையெல்லாம் காதிலையே போட்டுக்கொள்ளவில்லை.
இந்த கதையை படிச்சி பாருங்க உங்களுக்கு பிடிக்கும். எனக்கு உங்க கூட படம் பண்ணனும்னு விருப்பம் இருக்கு. பாருங்க என கூறிவிட்டு உடனடியாக சென்றுவிட்டார். இப்படிதான் தங்களது முதல் சந்திப்பு அமைந்ததாக கூறுகிறார் சந்தோஷ் நாராயணன்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE